இரவோடு இரவாக விலகல்… அதிமுகவில் இருந்து 1,200 பேருடன் வெளியேறிய முக்கிய புள்ளி… இபிஎஸ்-க்கு அடுத்த தலைவலி….!

Spread the love

புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், திருமயம் தொகுதி முன்னாள் அதிமுக வேட்பாளரான பி.கே. வைரமுத்து, கட்சித் தலைமை மீது கொண்ட அதிருப்தி காரணமாக தனது ஆதரவாளர்கள் சுமார் 1,200 பேருடன் கட்சியில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அவர்கள், புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளராக ராமு என்பவரை புதிதாக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் மீதான கடும் அதிருப்தி காரணமாகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து, கட்சியின் தீவிர முகமாகச் செயல்பட்டு வந்த பி.கே. வைரமுத்துவின் இந்த திடீர் விலகல் புதுக்கோட்டை அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவரது பின்னணியைத் தொடர்ந்து இன்னும் ஏராளமான ஆதரவாளர்கள் அடுத்தடுத்து அதிமுகவில் இருந்து விலக உள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள், கட்சித் தலைமைக்கு கூடுதல் நெருக்கடியை உருவாக்கியுள்ளன.

Nanthini

Recent Posts

பகீர்… மச்சான் தலையில் கல்லை போட்டு கொன்ற மாமா… மனைவியை அழைக்கச் சென்ற இடத்தில் கொடூரம்… பழனியில் பயங்கரம்…!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள சரவணம்பட்டியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் துர்க்கைராஜ் (30). இவருக்கும் இவரது மனைவி சுலோச்சனாவிற்கும் (28) இடையே…

4 minutes ago

மக்களின் உணர்வுகளுக்கு எதிராக அணுக்கனிம சுரங்கத் திட்டம்… தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்… மத்திய அரசுக்கு ‘ரெட் கார்ப்பெட்’ விரித்ததா தமிழக அரசு…!

மக்களின் உணர்வுகளுக்கு எதிராக அணுக்கனிம சுரங்கத் திட்டம்... தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்... மத்திய அரசுக்கு ‘ரெட்…

4 minutes ago

பூங்காவில் நடுரோட்டில் படுத்திருந்த சிறுத்தை… 1 மணி நேரம் ஸ்தம்பித்த சுற்றுலா வாகனங்கள்… திக் திக் நிமிடங்கள்…!!

மத்தியப் பிரதேசத்தின் புகழ்பெற்ற கூனோ தேசியப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் சென்ற சஃபாரி பாதையில் திடீரென ஒரு சிறுத்தை வந்து…

13 minutes ago

ஒரே ஒரு புகார்… 20 இடங்களில் ரெய்டு… மாஜி அமைச்சர் எ.வ. வேலுவுக்கு சம்மன்… திமுக வட்டாரத்தில் திடீர் பதற்றம் ஏன்…!

திமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் மூத்த தலைவர்களுமான எ.வ. வேலுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ள விவகாரம் தமிழக அரசியலில்…

13 minutes ago

“நள்ளிரவில் கதவைத் தட்டிய வாலிபர்… போனில் கதறிய மனைவி…! இளம்பெண் மர்ம மரணத்தின் திடுக்கிடும் பின்னணி…!!”

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் நவலை கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன்-சொர்ணலதா தம்பதியருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆவதோடு, ஒரு மகனும்…

16 minutes ago