தமிழக அரசியலில் பரபரப்புக்கு என்றும் பஞ்சமிருப்பதில்லை. 2026 சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி, காங்கிரஸ், விசிக போன்ற தோழமைக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது. இந்நிலையில், அதிமுகவில் இருந்து ஏற்கனவே பல எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்து வரும் சூழலில், தற்போது ஆளுங்கட்சியான திமுகவிலிருந்தும் ஒரு முக்கிய விக்கெட் விழப்போவதாக அரசியல் வட்டாரங்களில் பலத்த காற்று வீசத் தொடங்கியுள்ளது.
அந்த அதிர்ச்சி தரும் விக்கெட் வேறு யாருமல்ல, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான ஓ. பன்னீர்செல்வம் தான் என்று தேனி வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு சட்டப் போராட்டங்கள் நடத்தியும் பலனில்லாததால், கடந்த தேர்தலுக்கு முன்பாக அவர் திமுகவில் இணைந்தார். திமுக சார்பில் அவரது சொந்தத் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாகவும் வென்றார். இருப்பினும், அதிமுகவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், நிதியமைச்சர் எனப் பல்லாண்டுகள் வலம் வந்த தமக்கு, திமுகவில் தகுந்த மரியாதையோ அல்லது குறைந்தபட்சம் மாவட்டச் செயலாளர் போன்ற கட்சிப் பொறுப்புகளோ வழங்கப்படாததால் அவர் கடுமையான மனக்குமுறலில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், அவரது மகனான ஓ.பி. ரவீந்திரநாத் குமார் தவெக நிர்வாகிகளுடன் தொடர்ந்து ரகசியத் தொடர்பில் இருந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. தந்தை திமுகவில் இருக்கும்போது தான் மட்டும் தவெக-விற்குச் சென்றால் சரியாக இருக்காது என்பதால், தந்தையையும் தவெக-விற்கு அழைத்துச் செல்லும் திட்டத்தில் அவர் தீவிரமாக இருக்கிறாராம். திமுக தலைமையில் தமக்கும், தன் மகனுக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்காத விரக்தியில் இருக்கும் ஓபிஎஸ், தவெக-வில் இணைவதே அரசியல் எதிர்காலத்திற்குச் சரியாக இருக்கும் எனத் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
தற்போது மரகதம் குமரவேல், சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஆறு பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ள நிலையில், அவர்களோடு சேர்ந்து ஓபிஎஸ்ஸும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணையப் போகிறார் என்ற செய்தி தென் மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பிலோ அல்லது திமுக தரப்பிலோ இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வரவில்லை என்றாலும், இன்னும் சில வாரங்களில் தேனியிலிருந்து ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்பம் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்களால் அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும்…
மாதத்தின் தொடக்கத்திலேயே நகைப் பிரியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 1) தங்கம் விலை மளமளவெனக் குறைந்துள்ளது.…
தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான தவெக அரசு, கன்னியாகுமரி மாவட்ட அணுக்கனிம…
தமிழகத்தின் முழுநேர ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி அண்மையில் மேற்கு வங்க மாநிலத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து, கேரள ஆளுநராக இருக்கும் ராஜேந்திர…
தமிழகத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத தவெக கூட்டணி அரசுக்கு காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவளித்து வருகின்றன. இதில்,…
மதுரை மாவட்டம் மேலவளவில் படுகொலை செய்யப்பட்ட முருகேசன் உள்ளிட்ட 6 பேரின் நினைவு நாளையொட்டி, அங்குள்ள மணிமண்டபத்தில் விடுதலைச் சிறுத்தைகள்…