சாதனை வீரருக்கு ரயில் நிலையத்தில் நேர்ந்த சோதனை…! கெஞ்சிய பயிற்சியாளர்…!! 5 மணி நேர போராட்டத்திற்கு பின் நடந்த பரபரப்பு…!!

Spread the love

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தேசிய போல்வால்ட் சாதனையாளர் தேவ் குமார் மீனா, மங்களூரு போட்டியில் வென்றுவிட்டு தனது பயிற்சியாளர் மற்றும் சக வீரர்களுடன் இரயிலில் ஊர் திரும்பினார். தலா 5 மீட்டர் நீளம் கொண்ட சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலையுயர்ந்த போல்வால்ட் கம்புகளை அவர்கள் பயணிகள் பெட்டியில் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், கம்புகளின் நீளம் அதிகமாக இருப்பதாகக் கூறி, டிக்கெட் பரிசோதகர் அவர்களை அனுமதிக்க மறுத்துவிட்டார். சரக்கு பெட்டியில் அனுப்பினால் கம்புகள் சேதமடையும் என பயிற்சியாளர் எவ்வளவோ கெஞ்சியும் அதிகாரிகள் கேட்கவில்லை.

இந்த அதிகாரப்பூர்வ மோதலால் வீரர்கள் தாங்கள் செல்ல வேண்டிய இரயிலைத் தவறவிட்டு, அடுத்த இரயிலுக்காக 5 மணி நேரம் காத்திருக்க நேரிட்டது. இறுதியில் 1,875 ரூபாய் அபராதம் செலுத்திய பிறகே கம்புகளுடன் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். ஒரு தேசிய வீரருக்கே இந்நாட்டின் இரயில்வே நிர்வாகத்தால் இத்தகைய நெருக்கடி ஏற்பட்டது விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு உபகரணங்களை எடுத்துச் செல்ல தெளிவான விதிமுறைகளை இரயில்வே வகுக்க வேண்டும் என தேவ் குமார் மீனா வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Devi Ramu

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

7 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

8 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

8 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

8 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

8 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

8 மணத்தியாலங்கள் ago