“10 வருடம்… 1000 திருட்டுகள்”… பெண்களின் உள்ளாடைக்குள் ஒளிந்திருந்த திடுக்கிடும் ரகசியம்… அண்ணா நகரில் சிக்கிய ‘ஸ்பெஷல் பாவாடை’ டீம் – பகீர் பின்னணி….!

Spread the love

சென்னையில் உள்ள ஒரு பிரபல சூப்பர் மார்க்கெட்டில், வித்தியாசமான முறையில் மளிகைப் பொருட்களைத் திருடி வந்த ஒரு கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பொருட்கள் அடிக்கடி காணாமல் போவதைக் கவனித்த மேலாளர் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இந்த நூதனத் திருட்டு வெளிச்சத்திற்கு வந்தது. சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கும்பல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தத் திருட்டுச் சம்பவத்தில் முக்கியமாக இரண்டு பெண்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பெரிய அளவிலான மளிகைப் பொருட்களை மறைத்து வைப்பதற்காகவே, உட்புறத்தில் பல ரகசியப் பைகள் (Hidden Pockets) தைக்கப்பட்ட விசேஷமான பாவாடைகளை அணிந்து வந்துள்ளனர். ஊழியர்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிட்டு, எண்ணெய் பாக்கெட்டுகள் மற்றும் தேயிலைத்தூள் போன்ற பொருட்களைத் தங்களது பாவாடைக்குள் இருக்கும் ரகசியப் பைகளில் மறைத்து வைத்துக்கொண்டு சாதாரணமாக வெளியேறி விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு உதவியாக சில ஆண்களும் வெளியிலிருந்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

தற்போது இந்த வழக்கில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தனலட்சுமி (50), நாகம்மாள் (70) ஆகிய இரு பெண்கள் உட்பட மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் கூட்டமாக கடைக்குள் நுழைந்து, ஊழியர்களின் பார்வையில் படாமல் பொருட்களைத் திருடுவதால் நீண்ட காலமாக இவர்கள் சிக்காமல் இருந்துள்ளனர். பத்து வருடங்களாகத் தொடர்ந்து வந்த இவர்களது கைவரிசை, தற்போது சிசிடிவி கேமராக்களின் உதவியால் முடிவுக்கு வந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

9 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

9 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

9 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

9 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

9 மணத்தியாலங்கள் ago