கடந்த 15 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்து வரும் போர் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் இன் தலையீட்டின் காரணமாக நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தப் போர் முடிவுக்கு வந்த நிலையில் மீண்டும் இஸ்ரேல் காசா மீது தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்தப் போரை நிறுத்துவதற்கான வாய்ப்பே இல்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன் யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதே சமயம் இந்தப் போரால் பெரிதும் பாதிக்கப்படும் காசாவில் கடும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகின்றது. அங்கு உணவு இல்லாமல் மக்கள் குறிப்பாக குழந்தைகள் தவித்து வரும் நிலையில் கடந்த வாரம் திங்கட்கிழமை அன்று காசா மனிதாபிமான அறக்கட்டளை வழங்கிய உணவுப் பொருளை வாங்க சென்ற 17 அப்பாவி பொதுமக்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொன்றது.
இப்படியான நிலையில் போர் என்பது எவ்வளவு கொடூரமானது என்பதற்கு இந்த செய்தி தான் சான்றாகும். காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் உணவு மற்றும் உடை என எதுவும் இல்லாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். இதனிடையே பசியால் வாடிய பாலஸ்தீனர்கள் உணவுக்காக காத்திருந்தபோது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். 146 பேர் காயமடைந்துள்ளனர். இதுபோன்ற கொடுமை தான் உலகத்திற்கு போர் என்ற அரக்கன் சொல்லும் செய்தி.
உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூரில், 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் காவலர் மீது சுமத்தியுள்ள பாலியல் வன்கொடுமை மற்றும்…
உத்தரப் பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் இரண்டு காளை மாடுகள்…
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் அம்பானி, பசு பாதுகாப்பு மற்றும் 'கோ சேவை' குறித்துப் பேசிய வீடியோ…
பஞ்சாப் மாநிலம் கோட்காபுராவைச் சேர்ந்த பிம்லா தேவி என்ற பெண்மணி, தனது குழந்தைகளுக்குத் துணி வாங்கச் சென்ற இடத்தில் வாங்கிய…
சேலம் பள்ளப்பட்டி சின்னேரி வயக்காடு பகுதியைச் சேர்ந்த வெள்ளி வியாபாரி பாலசுப்பிரமணி என்பவரது பட்டறையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு…
தேசிய அளவிலான அவசரநிலைகள் அல்லது பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில், பிரித்தானிய குடிமக்கள் தங்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீரை குறைந்தபட்சம்…