உத்தரப் பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் இரண்டு காளை மாடுகள் திடீரென புகுந்து உலா வந்த சம்பவம் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களிடையே பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பிரதான கதவு வழியாக மருத்துவமனைக்குள் நுழைந்த இரண்டு காளைகளும் நோயாளிகள் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் புகுந்தன.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் கட்டில்களில் இருந்து எழுந்து அலறியடித்து ஓடினர். பின்னர் அங்கிருந்தவர்கள் பெரும் போராட்டத்திற்குப் பிறகு காளைகளைப் விரட்டி அடித்தனர். நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், அரசு மருத்துவமனையின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்தும், சுற்றியுள்ள சுற்றித்திரியும் கால்நடைகளின் அச்சுறுத்தல் குறித்தும் பொதுமக்கள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையின் பின்புறமுள்ள வயல்வெளியில், நாட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்து அதனை வீடியோவாகப்…
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே பணம், கார் மற்றும் நகை கொடுக்கல் வாங்கல் தகராறில் நண்பரைக் கொடூரமாக வெட்டிக் கொலை…
தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனை பங்குதாரர் பிரச்சினை தொடர்பாக ஒரு தரப்பினருக்கு ஆதரவாகச் செயல்பட்டு ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாக…
பிக் பாஸ் புகழ் ஜூலி தற்போது கர்ப்பமாக இருக்கும் சூழலில், அவரது கர்ப்ப காலத்தை தவறாக கணக்கிட்டு சமூக வலைதளங்களில்…
தமிழகத்தில் சிறுமிகளைப் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கும் நோக்கில் கடத்தப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாகப்…
கர்நாடகாவின் பாரம்பரியமிக்க மைசூரு தசரா விழாவின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட பிரம்மாண்டமான டிரோன் ஒளிக்காட்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. பன்னிமண்டபத்தில்…