திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையின் பின்புறமுள்ள வயல்வெளியில், நாட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்து அதனை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளத்தில் ரீல்ஸாக வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லைக்ஸ்களுக்காக இளைஞர்கள் இதுபோன்று விபரீத செயலில் ஈடுபட்டுள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த பாளையங்கோட்டை போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு நாட்டு வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்த சமாதானபுரத்தைச் சேர்ந்த 23 வயதான அஸ்வின் என்பவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்ற அவரைப் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து வெடிக்காத நாட்டு வெடிகுண்டு மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், வயல்வெளியில் நாட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்த நபர் நெல்லை டவுன் வயல் தெருவைச் சேர்ந்த அய்யப்பன் என்பது தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள அவரைப் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், நாட்டு வெடிகுண்டை தயாரித்ததற்கான பின்னணி என்ன மற்றும் அதனை வீடியோவாக வெளியிடக் காரணம் என்ன என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநிலம் திருவல்லா அருகே உள்ள புளிக்கிழ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சதுப்புநிலப் பகுதியில், கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட்…
குஜராத் மாநிலம், சூரத் நகரில் உள்ள ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணிபுரிந்து வந்த 26 வயதுடைய ருத்விக் மக்வானா…
மங்கலான வெளிச்சம் கொண்ட இரவு நேரச் சாலைகளில் ஒரு சிறிய கவனக்குறைவும் விபரீத விளைவை ஏற்படுத்திவிடும் என்பதற்கு இந்தச் சம்பவம்…
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் செயல்பட்டு வரும் பிரபல மின்னணு விநியோக நிறுவனமான இங்க்ராம் மைக்ரோவின் சேமிப்புக் கிடங்கில் பெரும் துணிகரக்…
உத்தரப் பிரதேச மாநிலம், காசிப்பூர் மாவட்டத்தில் உள்ள காமர் காவல் நிலையத்தில் பணியாற்றும் மோகித் யாதவ் என்ற காவலர் மீது…
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகரான பியூஷ் ஜெய்ஸ்வாலின் விலையுயர்ந்த சொகுசு வாகனம் நள்ளிரவில் மாயமானது…