நியூ ஜெர்சியில் உயர்நிலைப் பள்ளி சமூக அறிவியல் ஆசிரியராகவும் கால்பந்து பயிற்சியாளராகவும் பணிபுரிந்த 38 வயதான ரியான் மெக்காஃபெரி, இணையத்தில் பதின்ம வயது சிறுவனைப் போல நடித்து நூற்றுக்கணக்கான சிறுமிகளை ஏமாற்றியுள்ளார். ஸ்னாப்சாட் மற்றும் ‘கிக்’ போன்ற செயலிகளைப் பயன்படுத்தி அவர்களிடம் நிர்வாணப் புகைப்படங்களைக் கோரியதுடன், தனது அந்தரங்கப் படங்களையும் அனுப்பியுள்ளார். கடந்த புதன்கிழமை (அக் 21) அன்று இவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், விடுதலையான பிறகு ஐந்து ஆண்டுகள் காவல்துறையின் கண்காணிப்பையும் எதிர்கொள்ளவுள்ளார்.
கடந்த நவம்பர் 2024-ல் இவர் குழந்தைகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் உள்ளடக்கங்களைப் பகிர்ந்ததாகத் தேசிய மையம் மாநில காவல்துறையினருக்குத் தகவல் அளித்தது. இதனையடுத்து, 2025 ஜனவரியில் அவரது இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பல மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டு, தடயவியல் பகுப்பாய்வு மூலம் அவரது வக்கிரச் செயல்கள் வெளிச்சத்திற்கு வந்தன. இதனைத் தொடர்ந்து நியூ ஜெர்சியில் கைது செய்யப்பட்ட அவர் பிப்ரவரி 2025-ல் பள்ளியிலிருந்து ராஜினாமா செய்தார்; பின்னர் லாங் ஐலாந்து காவல்துறையினராலும் கைது செய்யப்பட்டார்.
கடந்த மாதம் மெக்காஃபெரி தன் மீதான குற்றங்கள் அனைத்தையும் நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டார். குற்றத்தை ஒப்புக்கொள்வதற்கு முன்பே, அவர் நியூ ஜெர்சியில் இதே போன்ற குற்றங்களுக்காகத் தண்டனையை ஏற்று, அங்கு கடந்த பிப்ரவரியில் ஐந்தாண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்கத் தொடங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தராகண்ட் மாநிலம் பௌரி மாவட்டத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தின் போது, பயணிகள் தங்களின் உயிரைத் தற்காத்துக் கொள்ள போராடிய பதறவைக்கும்…
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் வானிலை மாற்றங்கள் காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, புதுக்கோட்டை,…
ஆர்னை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கமல்பூர் கிராமத்தில், விளைநிலத்திற்குள் ஆடு நுழைந்தது தொடர்பாகக் கடுமையான வாக்குவாதம் வெடித்தது. அந்தச் சமயத்தில்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நடைபெற்ற அதிரடி போலீஸ் சோதனையில், இட்லி கடை நடத்தி வந்த தம்பதி உட்பட மூவர்…
கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் கண்டகல் கிராமத்தில், நிலப் பிரச்சனை காரணமாகப் பெண் ஒருவர் மீது வாகனம் ஏற்றி கொல்ல…
கேரள மாநிலம் திருவல்லா அருகே உள்ள புளிக்கிழ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சதுப்புநிலப் பகுதியில், கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட்…