தேசிய அளவிலான அவசரநிலைகள் அல்லது பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில், பிரித்தானிய குடிமக்கள் தங்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீரை குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்குச் சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு சுமார் 36 லிட்டர் குடிநீர் தேவைப்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் தேவையற்ற பதற்றமடையாமல் முன்எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த வழிகாட்டுதலின்படி, எளிதில் கெட்டுப்போகாத டின் உணவுகள், உலர் பழங்கள், காய்கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுடன் முதலுதவி பெட்டி, போர்வைகள், பேட்டரி டார்ச், முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பவர் பேங்க், அவசர காலப் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை மக்கள் தயாராக வைத்திருக்க வேண்டும். மேலும், வீட்டில் உள்ள கைக்குழந்தைகளுக்கான பால் பவுடர், டயப்பர்கள் மற்றும் வளர்ப்புப் பிராணிகளுக்கான உணவுத் தேவைகளையும் முன்கூட்டியே பூர்த்தி செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தீவிர வானிலை மாற்றங்கள், புயல்கள், காட்டுத்தீ மற்றும் சர்வதேச சைபர் தாக்குதல் அபாயங்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டே இந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடலுக்கடியில் உள்ள முக்கிய தொலைத்தொடர்பு மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளுக்கு ஏற்படும் பாதிப்புகளால் மின்சாரம், குடிநீர், தகவல் தொடர்பு போன்ற அடிப்படைச் சேவைகள் தடைபடக்கூடும் என்பதால், இதுபோன்ற பேரிடர் சூழல்களைச் சமாளிக்க மக்கள் தயார்நிலையில் இருப்பது அவசியம் என்று அந்நாட்டு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் சோலாபூர் நகரின் திலக் சௌக் பகுதியில் உள்ள குபேர்கல்லி பகுதியில் பழமையான சுவர் ஒன்று திடீரென இடிந்து…
உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூரில், 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் காவலர் மீது சுமத்தியுள்ள பாலியல் வன்கொடுமை மற்றும்…
உத்தரப் பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் இரண்டு காளை மாடுகள்…
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் அம்பானி, பசு பாதுகாப்பு மற்றும் 'கோ சேவை' குறித்துப் பேசிய வீடியோ…
பஞ்சாப் மாநிலம் கோட்காபுராவைச் சேர்ந்த பிம்லா தேவி என்ற பெண்மணி, தனது குழந்தைகளுக்குத் துணி வாங்கச் சென்ற இடத்தில் வாங்கிய…
சேலம் பள்ளப்பட்டி சின்னேரி வயக்காடு பகுதியைச் சேர்ந்த வெள்ளி வியாபாரி பாலசுப்பிரமணி என்பவரது பட்டறையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு…