சேலம் பள்ளப்பட்டி சின்னேரி வயக்காடு பகுதியைச் சேர்ந்த வெள்ளி வியாபாரி பாலசுப்பிரமணி என்பவரது பட்டறையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் புகுந்த முகமூடி கும்பல் ஒன்று காவலாளியைத் தாக்கி கட்டிப்போட்டுவிட்டு சுமார் 550 கிலோ வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றது. இச்சம்பவம் தொடர்பாக சேலம் மாநகர காவல் ஆணையர் மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது.
வழக்கின் தீவிர விசாரணையில், கொள்ளைக் கும்பலின் முக்கிய சூத்திரதாரியான கோவையைச் சேர்ந்த அபிஷேக் என்பவரைத் தஞ்சாவூர் பேருந்து நிலையம் அருகே தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையைத் தொடர்ந்து, அவரது கூட்டாளிகளான ஸ்ரீதர், ஞானபிரகாசம், அருண்குமார் மற்றும் அண்ணாமலை ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 323 கிலோ வெள்ளி நகைகள், கொள்ளைக்குப் பயன்படுத்திய 2 கார்கள், முகமூடிகள் மற்றும் இரும்புக் கம்பிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கொள்ளைச் சம்பவத்தின் போது சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளை சேதப்படுத்திய இக்கும்பல், காவல்துறையிடம் இருக்க சுங்கச்சாவடிகளைத் தவிர்த்து சுமார் 2,400 கி.மீ தூரம் வரை கிராமப்புற மற்றும் மாற்றுச் சாலைகள் வழியாகப் பயணித்துள்ளனர். எனினும், ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவர்களது வாகனம் நீண்ட நேரம் நின்றிருந்ததை முக்கியத் தடயமாகக் கொண்டு, கோவை மற்றும் மதுரை வழித்தடங்களில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தொழில்நுட்ப உதவியுடன் போலீஸார் இவர்களைக் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள எஞ்சிய 3 பேரையும் தனிப்படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் சோலாபூர் நகரின் திலக் சௌக் பகுதியில் உள்ள குபேர்கல்லி பகுதியில் பழமையான சுவர் ஒன்று திடீரென இடிந்து…
உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூரில், 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் காவலர் மீது சுமத்தியுள்ள பாலியல் வன்கொடுமை மற்றும்…
உத்தரப் பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் இரண்டு காளை மாடுகள்…
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் அம்பானி, பசு பாதுகாப்பு மற்றும் 'கோ சேவை' குறித்துப் பேசிய வீடியோ…
பஞ்சாப் மாநிலம் கோட்காபுராவைச் சேர்ந்த பிம்லா தேவி என்ற பெண்மணி, தனது குழந்தைகளுக்குத் துணி வாங்கச் சென்ற இடத்தில் வாங்கிய…
தேசிய அளவிலான அவசரநிலைகள் அல்லது பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில், பிரித்தானிய குடிமக்கள் தங்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீரை குறைந்தபட்சம்…