திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த படவேடு பகுதியை சேர்ந்தவர் விஜயன் என்ற 65 வயது முதியவர். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவருடைய மனைவி கஸ்தூரி. இவர் கண்ணமங்கலம் அருகே உள்ள மங்களாபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இப்படியான நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறால் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில் விஜய் என் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இப்படியான நிலையில் கடந்த மே மாதம் படவேடு ரேணுகாம்பாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய விஜயன் பந்தபோது தரிசனம் முடிந்து கையில் வைத்திருந்த 4 கோடி மதிப்புள்ள நில பத்திரத்தை உண்டியலில் போட்டு உள்ளார். பிறகு அங்கிருந்து அவர் சென்று விட்டார். நேற்று ரேணுகாம்பாள் கோவிலில் உண்டியல் என்னும் பணி நடைபெற்ற போது இதனை அறிந்த விஜயன் கோவிலுக்கு வந்துள்ளார். கோவில் ஊழியர்களிடம் உண்டியலில் நான்கு கோடி மதிப்புள்ள பத்திரம் உள்ளது. அதனை முறையாக கோவிலுக்கு மாற்றி எழுதி தருவதாக கூறியுள்ளார்.
இதனைக் கேட்ட கோவில் ஊழியர்கள் மட்டுமல்லாமல் அந்த பகுதி மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இப்படியான நிலையில் விஜயன் கோவில் உண்டியலில் பத்திரத்தை போட்ட தகவல் அறிந்து வந்த மனைவி மற்றும் மகள்கள் கோவில் ஊழியர்களிடம் சொத்து பத்திரம் எங்களுக்கு சொந்தமானது என்றும் அதனை எங்கள் அனுமதி இல்லாமல் எப்படி எழுதி தர முடியும் என்றும் வாதிட்டனர். இது தொடர்பாக விஜயன் கூறும் போது, என் மகள்களே என்னை அப்பா இல்லை என்று சொல்லிவிட்டதால் என்னை அடிப்பதற்கு ஆட்களை கூட்டி வந்தனர்.
என் பரம்பரைக்கு அம்மன் அருள் வேண்டும் என்பதாலும் இந்த சொத்துக்களை கோவிலுக்கு எழுதி வைக்கிறேன். சொத்துக்காக மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். என் மனைவியும் 25 வருடமாக எனக்கு சோறு போடவில்லை. அப்பா இல்லை என்று சொன்ன மகள்களுக்கு நான் எதற்காக சொத்துக்களை கொடுக்க வேண்டும். அத்தனையும் நான் சம்பாதித்த சொத்து தான். பரம்பரை சொத்து என எதுவுமே கிடையாது. அத்தனையையும் நான் கோவிலுக்கு தானமாக அளிக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். இந்த செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மலைக்கிராமப் பகுதியான சக்ராத்தாவைச் சேர்ந்த ஷர்மிளா என்ற மணப்பெண்ணுக்கும், அனில் என்பவருக்கும் அண்மையில் திருமணம்…
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லால்டி தேவி என்ற பெண் மீன் சாப்பிட்டபோது எதிர்பாராதவிதமாக தொண்டையில் முள் சிக்கியது. தீவிர சிகிச்சை…
பஞ்சாப் மாநிலத்தில் போதைப்பொருள் பழக்கத்தின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், கபூர்தலாவைச் சேர்ந்த 10 வயது சிறுவன்…
இந்தியக் குடிமக்கள் மற்றும் இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டினர் வைத்திருக்கும் ஓட்டுநர் உரிமங்களை எளிதில் அடையாளம் காணும் வகையில், இரு தரப்பினருக்கும்…
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி ஒருவர், தனது தோழியான தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் நிர்வாகியுடன்…
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை அம்மன் கோயில் தெரு, சிவாஜி நகர் பகுதியில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் புதிதாகக்…