Connect with us
Oyo

LIFESTYLE

ஓயாத உழைப்பால் உருவான OYO.. ஊர் சுற்றப் போனவர் மூளையில் உதித்த மில்லியன் டாலர் வருமான ஐடியா

சுற்றுலா செல்லும் போதோ அல்லது பணி நிமித்தமாக வெளியூர் செல்லும் போதோ இரவில் தங்க வேண்டிய சூழல் ஏற்படும் போது நாம் லாட்ஜ் புக் பண்ணும் போது பல இடர்பாடுகள் இருக்கின்றன. விருந்தினர்களின் பாதுகாப்பு, தரமான உணவு, குறைவான பட்ஜெட் போன்ற அனைத்தையும் பார்த்துத் தான் நாம் ஹோட்டல்களில் ரூம்களை புக் செய்கிறோம். ஆனால் சில நேரங்களில் நாம் வெளியூர் செல்லும் போது ஹோட்டல்களில் ரூம் வாடகையே கண்ணைக் கட்ட வைக்கிறது. இவற்றிற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக ஆரம்பிக்கப்பட்டது தான் OYO நிறுவனம்.

#image_title

   

இன்று OYO பற்றி தெரியாமல் யாருமே இருக்க முடியாது. இந்த  நிறுவனத்தின் விரிவாக்கமும் செல்வாக்கும் அப்படித்தான் இருந்திருக்கிறது. ஏனெனில் விருந்தோம்பலில் முன்னனி நிறுவனமாக உலகம் முழுவதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனை ஆரம்பித்தவர் ரித்தேஷ் அகர்வால். 1993 -ல்  ஒரிசாவில் உள்ள ஒரு சிறிய நகரமான ராயகடாவில் பிறந்த ரித்தேஷ்-க்கு இளமைக் காலங்கள் மிகுந்த சிரமமானதாக இருந்தது.

Oyo 2

#image_title

உயர்நிலைப் பள்ளியுடன் படிப்புக்கு முழுக்குப் போட்ட ரித்தேஷ் அதன்பின் பல இன்டர்ன்ஷிப்பில் செயலாற்றினார். இதன் காரணமாக அவருக்குக் கிடைத்த ஸ்காலர்ஷிப்பில் பயணங்கள் மேற்கொள்ள ஆரம்பித்தார். இந்தியாவின் வடக்கு மாநிலங்கள் பலவற்றிற்கும் பேருந்தில் பயணம் மேற்கொண்ட ரித்தேஷ் தான் தங்கும் இடங்களில் ரூம் வாடகைக்கே அதிக கட்டணம் கொடுப்பதை எண்ணி யோசிக்க ஆரம்பித்தார்.

இன்று கோடிகளில் சம்பாதித்து அவரையே மிரள வைத்த MSV-யின் மகள்.. என்ன செய்கிறார் தெரியுமா.?

கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய ரித்தேஷ் அகர்வாலுக்கு சொந்தமாக ஏதாவது தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருந்தது. வெறும் 17 வயதில், 2011 இல் Oravel தங்கும் யோசனையை அவர் கொண்டு வந்தார்.  ஆனால் இந்த திட்டம் தோல்வியடைய சேவைத்தரம் மிக குறைவாக இருந்தது. பின் இது மேம்படுத்தப்பட்டு 2013 இல் OYO அறைகளை உருவாக்க வழிவகுத்தது. OYO என்பது On Your Own என்பதன் சுருக்கமாகும். தற்போது இது ஹரியானாவின் குருகிராமை தலைமையாகக் கொண்டு செயல்படும் OYO நிறுவனம் உலகம் முழுவதும் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது.

Oyo

#image_title

இன்று ரித்தேஷ் அகர்வால் பிப்ரவரி 2020 இல் கைலி ஜென்னருக்குப் பிறகு உலகின் மிக இளைய சுயமாக சம்பாதிக்கம் கோடீஸ்வரர் என்ற சாதனையை அடைந்துள்ளார் . இந்த வெற்றியின் மத்தியில், OYO நிறுவனம் பல சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி, 43 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹோட்டல்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான அறைகளை வாங்கியுள்ளது OYO. தற்போது ‘OYO Hotels & Homes’ என்ற பெயரில் செயல்படுகிறது .

Continue Reading

More in LIFESTYLE

To Top