இன்று கோடிகளில் சம்பாதித்து அவரையே மிரள வைத்த MSV-யின் மகள்.. என்ன செய்கிறார் தெரியுமா.?

By John

Updated on:

MSV

அப்பா மறைந்த பிரபல இசையமைப்பாளர். ஆனால் மகளோ இன்று உலகம் முழுவதும் கொடிகட்டிப் பறக்கும் அழகு சாதன விற்பனை மையத்தின் முதலாளி. தனது வாரிசை இசைத்துறையில் நுழைய வைக்காமல் இன்று பலருக்கு வேலை கொடுக்கும் ஒரு நிறுவனத்தின் முதலாளியாக மாற்றியிருக்கிறார் மறைந்த இசை ஜாம்பவானான எம்.எஸ்.விஸ்வநாதனின் மகள் லதா.

இன்று இந்தியாவின் பல முன்னனி நகரங்களில் பியூட்டி பார்லர் துறையில் பெரிய மாற்றத்தை உண்டாக்கியவர் தான் இந்த லதா மோகன். `ஸ்பலான் இண்டியா பிரைவேட் லிமிடெட்’ என்ற தன் நிறுவனத்தின் கீழ், இருபாலருக்குமான 50-க்கும் மேற்பட்ட பியூட்டி பார்லர்களை நடத்தி வருகிறார். கிட்டத்தட்ட 450-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு முதலாளியான லதா மோகன், ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுகிறார்.

   

சென்னை மயிலாப்பூரில் ‘கன்யா‘ என்ற பெயரில் 1981-ல் தனது முதல் பார்லரைத் திறந்த இவர் தன்னுடைய தொழில் திறமையால் இன்று பல கிளைகளுக்கு முதலாளியாக உள்ளார். இவரது முதல் பார்லரை நடிகை ஸ்ரீ பிரியா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திறந்து வைத்துள்ளார். ஏனெனில் இவரும் ஸ்ரீ பிரியாவும் உற்ற தோழிகளாவர்.

எம்.ஜிஆர் முதல் விஜய் வரை.. இதுவரை அரசியில் கட்சி ஆரம்பித்த நடிகர்களின் லிஸ்ட்.. இதில் வென்றது யார் யார் தெரியுமா..? முழு விவரம்.

லதா மோகனின் தந்தை எம்.எஸ்.வி ஆரம்பத்தில் இது சரிபட்டு வருமா என்று சந்தேகத்தில் கேட்ட போது அதெல்லாம் சரியா வரும் என்று தந்தைக்கு நம்பிக்கை கொடுத்து இதில் இறங்கியுள்ளார். பின் அதில் வெற்றி பெற்ற போது அதுகுறித்து லதா மோகன் கூறுகையில் “என் பிசினஸ் வெற்றிகரமா போனதில் அதிக சந்தோஷப்பட்டவரும் என் அப்பாதான். பிற்காலத்தில், `நீ பல குடும்பங்களுக்குச் சாப்பாடு போடுறே. நல்ல காரியம் பண்ணேம்மா! என் பேச்சை மீறி பிசினஸை தொடங்கினது நல்லதுதாம்மா’னு உருக்கமாகப் பேசினார் அப்பா.

MSV
msv daugther

எம்.எஸ்.வியின் மகள் லதா என்ற இமேஜை மாற்றி லதாவின் அப்பாதான் எம்.எஸ்.வி என்னும் நிலைக்கு உயர்ந்துள்ளார் லதா. எம்.எஸ்.வியின் பேரனும், லதாவின் மகனுமான விக்ரம் லண்டனில் படிப்பை முடித்து விட்டு அம்மாவின் பிஸினஸில் இன்று உடனிருந்து கவனித்துக் கொள்கிறார். ஆரம்பத்தில் லதாவிடம் எம்.எஸ்.வி, “என்னம்மா… என் பேரன் வெளிநாட்டுல படிச்சுட்டு, சலூன் பிசினஸ் பண்றேன்னு சொல்றான். இது சரியா வருமா?’ என்று லதாவிடம் எம்.எஸ்.வி கேட்க அதற்கு அவரும் சரியாக வரும் அப்பா.. செய்யலாம் என்று தன்னம்பிக்கையுடன் கூறி இன்று தடம் பதித்திருக்கிறார்.

MSV
Kamal Hassan Launches 4th Bounce Style Lounge Photos

மேலும் எம்.எஸ்.வி-ஐ அவரின் பியூட்டி பார்லருக்கு ஒருமுறை அழைத்துச் சென்று அவரது பேரன் முடிவெட்டி விட்டாராம். மேலும், முதல் முறையாக அவருக்கு பெடிக்யூர் செய்துவிட, அவர் நெகிழ்ந்துபோய் இந்தத் தொழில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா என்று ஆச்சர்யப்பட்டுப் போனாராம் எம்.எஸ்.வி. இன்று லதா மோகனின் நிறுவனம் வெளிநாடுகளிலும் கால்பதித்து எம்.எஸ்.வி இசைக்கு அழகு சேர்த்தது போல் இவர் மனிதர்களுக்கு அழகு சேர்த்து வருகிறார்.

author avatar