இரண்டு மனைவிகள், 16 குழந்தைகள்..! “அரசு உதவி தேவையில்லை, உழைத்து வாழ்வோம்” சவால் விடும் நபர்… இந்த காலத்துல இப்படியொரு மனுஷனா…?

Spread the love

ஊடகவியலாளர் ஒருவர் இரண்டு மனைவிகள் மற்றும் 16 குழந்தைகளுடன் வசித்து வரும் நபர் ஒருவரை நேர்காணல் செய்துள்ளார். “உங்களுக்கு இரண்டு மனைவிகள் இருக்கிறார்களா, அவர்கள் உங்களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?” என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, “ஆமாம், எனக்கு இரண்டு மனைவிகள். அவர்கள் என்னுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நான் உழைத்து அவர்கள் இருவரையும் நன்றாகப் பார்த்துக் கொள்கிறேன்; பிறகு ஏன் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள்?” என்று அந்த நபர் மிகவும் நம்பிக்கையுடன் பதிலளித்துள்ளார். மேலும், தாங்கள் வெளியில் செல்லும்போது மக்கள் தங்களை ஆச்சரியத்துடன் பார்ப்பார்களே தவிர, யாரும் தவறாக எதுவும் சொல்வதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தங்களுக்கு இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைப் பற்றிக் பகிர்ந்துகொண்ட அவர், ஒரு மனைவிக்கு எட்டு குழந்தைகள் வீதம், இரண்டு மனைவிகள் மூலம் தனக்கு மொத்தம் 16 குழந்தைகள் இருப்பதாகக் கூறியுள்ளார். இவ்வளவு பெரிய குடும்பத்தைக் கொண்ட உங்களுக்கு அரசிடமிருந்து ஏதேனும் சலுகைகளோ அல்லது உதவிகளோ கிடைக்கிறதா என்று செய்தியாளர் கேட்டபோது, தங்களுக்கு இதுவரை எந்தவொரு அரசு உதவியும் கிடைக்கவில்லை என்று அவர் மறுத்துள்ளார். இத்தனை குழந்தைகளுக்குப் பிறகு அரசு உதவி கிடைத்திருக்க வேண்டுமே என்ற கேள்விக்கு, “அரசு உதவி கிடைக்காவிட்டாலும் எங்களுக்குப் பரவாயில்லை, நாங்கள் மொத்தம் 18 பேர் இருக்கிறோம், உழைத்து பிழைத்துக் கொள்வோம்” என்று உறுதியுடன் பதிலளித்துள்ளார்.

இறுதியாக, இவ்வளவு பெரிய குடும்பத்தை வழிநடத்துவது ஒரு சுமையாக இல்லையா என்று செய்தியாளர் வினவியபோது, அதை அவர் முற்றிலும் மறுத்தார். “இது எங்களுக்குச் சுமையே அல்ல. அதிக குழந்தைகள் இருந்தால் அதிக கைகள் என்று அர்த்தம். எதிர்காலத்தில் அவர்கள் அனைவரும் எங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். நாங்கள் கடினமாக உழைத்தால் மாதத்திற்கு 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்” என்று அந்த நபர் சவாலுடன் தெரிவித்துள்ளார். இந்த நேர்காணல் தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Soundarya

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

6 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

6 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

6 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

6 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

6 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

6 மணத்தியாலங்கள் ago