Categories: சினிமா

1 முறை, 2 முறையல்ல.. 550 முறை ரீ-ரிலீஸ் ஆன சூப்பர் ஹிட் திரைப்படம்.. அதுவும் ஒவ்வொரு முறையும் தியேட்டர் ஹவுஸ்புல் தானாம்..!

Spread the love

பொதுவாகவே ஒரு திரைப்படம் என்பது ரீலீஸ் செய்யப்படுவது என்பது அரிதான. அதுவும் ஹவுஸ்புல் என்பது மிகவும் அரிதான விஷயம். ஆனால் ஒரு திரைப்படம் 550 முறைக்கு மேல் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு அத்தனை முறையும் ஹவுஸ் ஃபுல் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா. 80 மற்றும் 90 காலகட்டத்தில் நிறைய ஆங்க்ரி யங் மேன் படங்கள் வெளியாகி ஹீரோயிசத்தை வளர்த்துக் கொண்டிருந்தன. அந்த சமயத்தில் தான் ஹிந்தியில் ராம் கோபால் வருமா இயக்கிய சத்யா என்ற திரைப்படம் வெளியானது. மும்பையின் நிழல் உலகம் மற்றும் மாஃபியாக்கள் பற்றி பேசிய திரைப்படம் தான் இது. இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் புதுப்புது கேங்ஸ்டர் சினிமாக்கள் உருவாகின.

அந்த படம் கன்னடத்தில் உருவான படம் தான் “ஓம்”. 1995 ஆம் ஆண்டு வெளியான ஓம் படத்தை கன்னட திரை உலகின் கல்ட் இயக்குனரும் நடிகருமான உபேந்திரா இயக்கி இருந்தார். அதுவரை சாக்லேட் பாய் கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த சிவராஜ் குமார் ஓம் படத்தில் கேங்ஸ்டர் ஆக நடித்தார். கன்னடா சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் கல்ட் கிளாசிக் என இன்று வரை கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்தத் திரைப்படம் ரிலீஸ் ஆன தேதியிலிருந்து இன்று வரை இரண்டு வாரத்துக்கு ஒருமுறை வீதம் சுமார் 550-க்கும் மேற்பட்ட முறை ரீலீஸ் ஆகி வருகின்றது.

பெங்களூரில் உள்ள கபலி என்ற திரை அரங்கில் மட்டும் இந்த திரைப்படம் சுமார் 30 முறை ரீலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதைவிட ஆச்சரியம் என்னவென்றால் ஒவ்வொரு முறையும் இந்த திரைப்படம் வெளியிடப்படும் போது ஹவுஸ் ஃபுல் ஆகி உள்ளது. கோவில் பூசாரியின் மகன் சத்யா ஒரு பெண்ணின் மீதான காதலால் வாழ்க்கை தடம் மாறி ரவுடியாக மாறுகின்றார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை. அதுவரை வந்த கன்னட சினிமாக்களிலேயே கர்நாடகாவின் நிழல் உலக சாம்ராஜ்ஜியத்தை நிஜத்திற்கு நிறையவே நெருக்கமாக காட்டி இருந்த திரைப்படம் தான் இது.

பல தடைகளைக் கடந்து 1995 ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பு பெற்ற இந்த திரைப்படம் கன்னடா சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த படம் என்ற பல சாதனையையும் நிகழ்த்தியுள்ளது. கன்னட மாநில சினிமா விருதுகளை வென்றுள்ள இந்த திரைப்படம் 2015 ஆம் ஆண்டு 10 கோடி ரூபாய்க்கு தனியார் சேனல் ஒன்றுக்கு ஒளிபரப்பு உரிமம் விற்கப்பட்டது. 20 ஆண்டுகால பழைய படம் ஒன்று இத்தனை கோடிக்கு விலை போனது அதுவே முதல் முறையாகும்.

Nanthini

Recent Posts

காப்பாத்துங்க…! கொழுந்துவிட்டு எரிந்த தீ… நெருப்பு வளையத்தில் சிக்கிய ஐடி அதிகாரிகள்… சினிமா பாணியில் அரங்கேறிய மாஸ் மீட்பு…!!

மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…

4 minutes ago

“ஆட்டோ டயரில் நாய் சிறுநீர் கழித்ததால் வந்த வினை…” 23 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை…! சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…

11 minutes ago

“அப்பாவை விட்டுடுடா”கதறிய குடும்பம்… போதையில் வெறிச்செயல் செய்த பெற்ற மகன்… நடுரோட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…

12 minutes ago

ஈரான் அளித்த அதிரடி ஆஃபர்… அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க… ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை… ட்ரம்ப் எடுக்க போகும் முடிவு என்ன?…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…

22 minutes ago

சினிமா பாட்டு தகராறா?.. இல்லை பழிக்குப் பழியா?.. ரத்த வெள்ளத்தில் கோவில் வளாகம்… இரட்டைக் கொலையில் வெடிக்கும் புது ட்விஸ்ட்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…

23 minutes ago

தாயுடன் நெருக்கம்… மகனுக்கு மிரட்டல்… செல்போனை நோண்டிய போலீசுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த மரண அடி…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…

31 minutes ago