Categories: சினிமா

அஜித்துக்கு விஜய் வாழ்த்து சொன்னாரா இல்லையா?.. பலவிதமான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மேனேஜர் சுரேஷ் சந்திரா..!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித்துக்கு சமீபத்தில் 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகளில் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. சினிமாவில் 30 ஆண்டுகளாக செய்த பங்களிப்புக்காக அஜித்துக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அஜித்துக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்து வந்தனர். ஆனால் அஜித்தின் சமகால போட்டியாளரான நடிகர் விஜய் அவருக்கு வாழ்த்து கூறவில்லை. இதற்கு முன்னதாக துபாயில் நடந்த 24H கார் ரேஸில் அஜித் குமாரின் அணி மூன்றாவது இடத்தை பிடித்தது. அது மட்டுமல்லாமல் அஜித்துக்கு சிறப்பு விருதும் வழங்கப்பட்டது.

அப்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் எந்த ஒரு வாழ்க்கையும் கூறவில்லை. அடுத்தடுத்து இரண்டு சம்பவங்களிலும் விஜய் மௌனமாக இருந்தார். இப்படியான நிலையில் விஜய் அரசியலுக்கு வந்ததால் அஜித்துக்கு மத்திய அரசு விருது கொடுத்திருப்பதாக சில விமர்சனங்களும் வந்தது. இதனால் இணையத்தில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மத்தியில் ஜாலியான ட்ரோல்கள் அரங்கேறின. இந்த நிலையில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா சில நேர்காணல்களை அழித்து வருகிறார்.

அதில் அஜித்துக்கு விஜய் வாழ்த்து சொல்லாதது குறித்த கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், துபாயில் நடைபெற்ற 24H கார் ரேஸில் அஜித் குமார் வென்ற பிறகு முதல் வாழ்த்து வந்ததே விஜய் சாரிடம் இருந்துதான். அதன் பிறகு அஜித்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டதும் விஜய் சாரிடம் இருந்து உடனடியாக வாழ்ந்து வந்தது. அவர்கள் இருவருக்குள்ளும் எப்போதும் ஒரு நல்ல நட்பு இருந்து வருகின்றது. அதனால் விஜய் சார் வாழ்த்து கூறவில்லை என்பதில் ஒரு துளி கூட உண்மை இல்லை. ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகள் அவை என்று சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பதில் இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

9 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

9 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

9 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

9 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

9 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

9 மணத்தியாலங்கள் ago