“அப்பாவை விட்டுடுடா”கதறிய குடும்பம்… போதையில் வெறிச்செயல் செய்த பெற்ற மகன்… நடுரோட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

Spread the love

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த சத்யா என்பவரின் இரண்டாவது மகன் முனுசாமி, காதல் திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வருகிறார். தனக்கு புதிய வீடு கட்டிக் கொள்ள நிலம் அல்லது அதற்கான பணத்தை வழங்கக் கோரி அவர் தனது தந்தையிடம் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பிரச்சினை செய்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று கஞ்சா மற்றும் மது போதையில் ஒரு மினி லாரியுடன் வந்த முனுசாமி, சொத்து விவகாரமாக தனது தந்தை மற்றும் தம்பி சதீஷுடன் மீண்டும் கடுமையான சண்டையில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற முனுசாமி, லாரியை வேகமாக ஓட்டி வந்து தனது தம்பி சதீஷ் மீது மோத முயன்றுள்ளார். இளைய மகனைக் காப்பாற்றுவதற்காக சத்யா அவரைப் பிடித்துத் தள்ளிவிட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரி சத்யா மீது பலமாக மோதியதோடு, அவரைச் சுமார் 300 மீட்டர் தூரம் தரதரவென இழுத்துச் சென்றது. இதில் உடல் முழுவதும் படுகாயமடைந்த சத்யா, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சொந்தத் தந்தையையே வாகனமேற்றிக் கொன்றுவிட்டுத் தப்பியோடிய முனுசாமியை ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Gayathri

Recent Posts

காப்பாத்துங்க…! கொழுந்துவிட்டு எரிந்த தீ… நெருப்பு வளையத்தில் சிக்கிய ஐடி அதிகாரிகள்… சினிமா பாணியில் அரங்கேறிய மாஸ் மீட்பு…!!

மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…

53 minutes ago

“ஆட்டோ டயரில் நாய் சிறுநீர் கழித்ததால் வந்த வினை…” 23 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை…! சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…

60 minutes ago

ஈரான் அளித்த அதிரடி ஆஃபர்… அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க… ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை… ட்ரம்ப் எடுக்க போகும் முடிவு என்ன?…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…

1 மணத்தியாலம் ago

சினிமா பாட்டு தகராறா?.. இல்லை பழிக்குப் பழியா?.. ரத்த வெள்ளத்தில் கோவில் வளாகம்… இரட்டைக் கொலையில் வெடிக்கும் புது ட்விஸ்ட்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…

1 மணத்தியாலம் ago

தாயுடன் நெருக்கம்… மகனுக்கு மிரட்டல்… செல்போனை நோண்டிய போலீசுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த மரண அடி…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…

1 மணத்தியாலம் ago

ஐயோ… காதலால் சீரழிந்த வாழ்க்கை?… அனுபமாவுக்கு நேர்ந்த கொடுமை… இணையத்தை அதிர வைத்த… ரேகா நாயரின் பேட்டி…!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தான் சந்தித்த நச்சுத் தன்மையுள்ள காதல் உறவைப் பற்றியும், அதில் ஏற்பட்ட மன உளைச்சல்கள் பற்றியும்…

1 மணத்தியாலம் ago