உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன், ராபிடோ பைக் டாக்ஸியில் பயணித்தபோது, அந்த ஓட்டுநர் அவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதாக அதிர்ச்சி குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார். பைக் ஓடிக்கொண்டிருந்தபோதே, ஓட்டுநர் தனது கையை பின்னோக்கி நீட்டி சிறுவனின் தொடையும் காலையும் தொட முயன்றுள்ளார். இதைத் தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்த அந்த சிறுவன், ஓட்டுநரின் கையைத் தட்டிவிடும் காட்சிகளுடன் அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, தான் ஒரு மைனர் என்பதையும் குறிப்பிட்டு ராபிடோ நிறுவனத்தைக் குறியிட்டிருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்திய நிலையில், ராபிடோ நிறுவனம் உடனடியாக இதற்குக் பதிலளித்தது. சிறுவனின் சவாரி விவரங்களைப் பெற்று விசாரணையைத் தொடங்கிய அந்நிறுவனம், வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட அந்த ஓட்டுநரைத் தங்களது செயலியில் இருந்து நிரந்தரமாக நீக்கி (Permanently Barred) நடவடிக்கை எடுத்தது. மேலும், இச்சம்பவத்திற்காக அச்சிறுவனிடம் நிறுவனம் வருத்தம் தெரிவித்துக் கொண்டது.
நிறுவனத்தின் இந்த விரைவான நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்த சிறுவன், தனக்கு ஆதரவளித்த இணையவாசிகளுக்கும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் நன்றியைத் தெரிவித்துக் கொண்டான். பலரும் அச்சிறுவனின் தைரியத்தைப் பாராட்டி கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். “வீடியோ பதிவு செய்ததால் மட்டுமே இந்தச் சம்பவம் வெளியில் தெரியவந்துள்ளது, இதற்கு முன் எத்தனை பேர் இதுபோன்று பாதிக்கப்பட்டிருப்பார்களோ” எனப் பயனீட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாகக் காவல் துறையில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளதா அல்லது அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் ஏதேனும் எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து இதுவரை தெளிவான விவரங்கள் வெளியாகவில்லை. இதுபோன்ற சவாரிச் செயலிகளில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ஓட்டுநர்களின் பின்னணி சரிபார்ப்பு குறித்த கேள்விகளை இச்சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது.
மும்பையின் இரயில் நிலையத்திலிருந்து நள்ளிரவில் வெளியேறிய ஒரு இளம் பெண், தனது வீட்டிற்குச் செல்ல ஒரு டேக்சிக்காகக் காத்திருந்தாள். டேக்சி…
அண்டை கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதி முழுவதையும் பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்த…
கோலாப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பராமரிப்புப் பணிமனையில், மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த எஸ்.டி…
ஒரு தாய்க்குத் தன் குழந்தையின் வேதனையை விடவா பெரிய துயரம் இருந்துவிட முடியும்? விளையாடும் வயதில் கைகளில் பொம்மைகளை ஏந்தி…
உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் உள்ள ‘நாலெட்ஜ் பீம் அகாடமி’ பள்ளியில், சுதந்திர தின விழாவின் போது புர்கா மற்றும்…
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. 2026 சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக…