மேடம்… 2 நிமிஷம் இருங்க… நள்ளிரவில் ஆள்நடமாட்டமில்லாத சாலையில் காரை நிறுத்திய ஓட்டுநர்… அடுத்த நடந்த ஷாக்கிங் சம்பவம்…!

Spread the love

மும்பையின் இரயில் நிலையத்திலிருந்து நள்ளிரவில் வெளியேறிய ஒரு இளம் பெண், தனது வீட்டிற்குச் செல்ல ஒரு டேக்சிக்காகக் காத்திருந்தாள். டேக்சி வந்ததும் காரின் பின்புற இருக்கையில் சில பொருட்கள் இருப்பதைக் கண்டாள். ஓட்டுநர் அவளிடம், “நிலையத்திலிருந்து தேவையான அனைத்தையும் எடுத்துக்கொண்டீர்களா?” என்று சாதாரணமாகக் கேட்டார். பெண் தலை அசைத்துவிட்டு காரில் ஏறினாள். இன்னும் 45 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டியிருந்ததாலும், நேரம் நள்ளிரவைக் கடந்திருந்ததாலும் அவள் பயணம் முழுவதும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்கத் தீர்மானித்தாள்.

பயணம் தொடங்கிய சில கிலோமீட்டருக்குள், ஓட்டுநர் கண்ணாடி வழியாகத் தன்னைத் திரும்பத் திரும்பப் பார்ப்பதை அவள் கவனித்தாள். திடீரென அவர் ஒரு ஆள் நடமாட்டமில்லாத தனிமையான இடத்தில் காரை நிறுத்தி, “மேடம், நான் கழிவறை சென்று இரண்டு நிமிடத்தில் வந்துவிடுகிறேன்” என்றார். ஏதோ தவறாக நடப்பதாக உணர்ந்த அப்பெண், பதற்றமடையாமல் சாதுரியமாகச் செயல்பட்டாள். உடனடியாகத் தன் தொலைபேசியை எடுத்து இன்ஸ்டாகிராம் லைவ் ஒளிபரப்பைத் தொடங்கினாள். வாகனத்தின் விவரங்கள் மற்றும் நேரலை இருப்பிடத்தைப் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டாள்.

பின்பு புன்னகையுடன், “இரவுப் பயணங்கள் மிகவும் அழகாக இருக்கும்… குறிப்பாக இதுபோன்ற ஒரு நல்ல ஓட்டுநர் அமைந்தால்” என்று கூறி, கேமராவை ஓட்டுநரின் முகத்திற்கு நேராகத் திருப்பினாள். தன் முகமும் வாகன விவரங்களும் நேரலையில் லட்சக்கணக்கான மக்களுக்குத் தெரிவதைக் கண்ட ஓட்டுநரின் முகம் மாறினாள். அவர் உடனடியாகக் காரைக் கிளப்பி, அவள் சேருமிடத்திற்குச் பாதுகாப்பாகக் கொண்டு சேர்த்தார். அச்சத்தில் அவர் பணத்தைக் கூட வாங்காமல் செல்ல முயன்றபோது, அப்பெண் அவரைத் தடுத்து நிறுத்திக் கட்டணத்தைக் கொடுத்து, “இரவில் ஒரு பெண் தனியாகப் பயணிக்கும்போது, அவளைப் பாதுகாப்பாகச் சேர்க்க வேண்டிய பொறுப்பு ஓட்டுநருக்குத்தான் அதிகம். பிறரின் பயத்தையோ பலவீனத்தையோ தவறாகப் பயன்படுத்தக் கூடாது” என்று கூறி அனுப்பி வைத்தாள். பயமின்றி, சமயோசிதமாகச் செயல்பட்டுத் தன் பாதுகாப்பை உறுதிசெய்த அந்தப் பெண்ணின் விழிப்புணர்வே அன்றிரவு அவளுக்குப் பாதுகாப்பாக அமைந்தது.

Swetha

Recent Posts

மசாஜ் சென்டர் பெயரில் நடந்த கொடூரம்… போதைப்பொருள் கடத்தல் மன்னன் அக்பர் அலி… போலீசிடம் சிக்கியது எப்படி?…

கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…

1 மணத்தியாலம் ago

ஐயோ கொடுமையே… வேடிக்கை பார்த்த நொடியில் விபரீதம்… குடிநீர் குழாய் பள்ளத்தில்… திடீரென சுருண்டு விழுந்த சிறுவன்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!!

சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…

1 மணத்தியாலம் ago

பார்த்தா ரத்தம் உறைஞ்சிடும்!… கையில் பச்சிளம் குழந்தை… கொடூரமாக பாய்ந்த வெறி மாடு… தாத்தாவின் பாசப் போராட்டம்… வைரல் சிசிடிவி காட்சி…!!

தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…

1 மணத்தியாலம் ago

அடக்கடவுளே!.. வெடிகுண்டு இல்ல… அமேசான் அலுவலகம் அருகே பயங்கர வெடிப்பு… பின்னணியில் இருந்த “ஒற்றை எலி”… வெளிவந்த பகீர் உண்மை…!!

பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…

1 மணத்தியாலம் ago

“என் நண்பனுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க…” ஈசிஜி மானிட்டர் ஒயரை பிடித்து இழுத்த வாலிபர்… ஹாஸ்பிடலில் அராஜகம் செய்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…

1 மணத்தியாலம் ago

ஐயோ… வயசுக்குக் கூட மரியாதையில்லையா?… மெட்ரோ சீட் தகராறில்… முதியவரை உதைத்துத் தள்ளிய பெண்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ வைரல்…!!

பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…

1 மணத்தியாலம் ago