தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து ஆளும்கட்சியான தவெக மேலிடத்தில் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. சட்டசபையில் தனது தனிப்பெரும்பான்மையையும் ஆட்சியின் ஸ்திரத்தன்மையையும் உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் தவெக இருப்பதால், இந்த இடைத்தேர்தல் முடிவுகள் சாதாரணமான ஒன்றாகப் பார்க்கப்படாமல், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளுக்கான திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவையில் ஆட்சி அமைப்பதற்கான மெஜாரிட்டிக்கு 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. தற்போது தவெகவின் சொந்த பலம் குறைவாக இருக்கும் சூழலில், ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள கூட்டணி மற்றும் ஆதரவு கட்சிகளின் தயவு அவசியமாகிறது. தற்போது காலியாக உள்ள 2 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றால், சட்டமன்றத்தில் அதன் சொந்த பலம் மேலும் வலுப்பெற்று ஆட்சி மீதான பிடிப்பு அதிகரிக்கும் என்பதால், ஆரம்பத்திலிருந்தே இத்தேர்தல் மிகவும் கௌரவப் பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது.
வாக்குப்பதிவு முடிந்த கையோடு, தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து முதலமைச்சர் விஜய் தனது மூத்த அமைச்சர்கள் மற்றும் அரசியல் ஆலோசகர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையின்போது, இரண்டு தொகுதிகளிலும் தவெகவே வெற்றி பெறும் என்றும், இந்த முடிவு பிரதான எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவை ஒரே நேரத்தில் பலவீனப்படுத்தும் என்றும் மூத்த அமைச்சர்கள் 5 பேர் புள்ளிவிவரங்களுடன் முதலமைச்சரிடம் மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.
அரசியல் கணக்குகளின்படி, சபாநாயகரைத் தவிர்த்து தவெகவிடம் தற்போது 106 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர்; இந்த இடைத்தேர்தல் வெற்றிக்குப்பின் அது 108 ஆக உயரும். தற்போது 5 இடங்கள் காலியாக உள்ள நிலையில் சட்டசபையின் மொத்த பலம் 229 ஆகக் குறைந்து, மெஜாரிட்டிக்கு 115 இடங்களே போதுமானது என்றாகிறது. இந்தச் சூழலில் காங்கிரஸின் 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு (113) பாமகவின் 4 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவையும் பெற்றால் பலம் 117 ஆக அதிகரிக்கும் என்பதால், தொடர் விமர்சனங்களை முன்வைக்கும் கம்யூனிஸ்டுகள் மற்றும் விசிகவின் ஆதரவு தவெகவுக்கு அத்தியாவசியமானது அல்ல என்ற வியூகமும் முன்வைக்கப்பட்டுள்ளது.
எனவே, பாமகவின் ஆதரவை முன்கூட்டியே உறுதிசெய்து கொண்டு, கூட்டணிக்குள் இருக்கும் எதிர்மறை விமர்சனங்களை அதிரடியாகக் கையாளலாம் என்றும் அமைச்சர்கள் ஆலோசித்துள்ளனர். இந்த தீவிர விவாதங்களின் முடிவில், “நாம் விவாதித்த இந்த உள்விவகாரங்கள் மற்றும் அரசியல் கணக்குகள் குறித்து பொதுவெளியில் யாரும் பேசி சர்ச்சையைக் கிளப்பக் கூடாது” என்று முதலமைச்சர் விஜய் எச்சரிக்கையுடன் அறிவுறுத்தியுள்ளார். இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெக எடுக்கப்போகும் அதிரடி முடிவுகள், தமிழக கூட்டணியமைப்பில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சிஞ்சோளியைச் சேர்ந்த 32 வயதான அர்ச்சனா என்ற பெண், குடும்பத் தகராறு காரணமாக அவரது…
இந்திய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் மேலாளர் மகேஷ் ஷெல்கே, மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக்…
தமிழகத்தில் தமிழக வெற்றி கழகத் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருவதாகவும், அந்த ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் தீவிரமாக ரகசியத் திட்டம்…
பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிகக் கணினி ஆபரேட்டராகப் பணியாற்றி வந்த ராஜேஸ்வரி என்ற பெண் ஊழியர் மீது, கடந்த மாதம்…
செயற்கை நுண்ணறிவு (AI) சாட்போட்டுகள் நமது அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவரும் அதே வேளையில், அவற்றின் தகவல்களைக்…
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள வடக்குசத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிப்பாண்டி (32). பெயிண்டிங் தொழிலாளியான இவருக்கும் மாரியம்மாள் என்பவருக்கும்…