தவெக ஆட்சிக்கு திடீர் ஆபத்து?சத்தமே இல்லாம தூக்க பிளான்…. திருமாவளவன் போட்ட போடு…. உளவுத்துறை அறிக்கையால் அதிர்ச்சியில் முதல்வர் விஜய்….!

Spread the love

தமிழகத்தில் தமிழக வெற்றி கழகத் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருவதாகவும், அந்த ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் தீவிரமாக ரகசியத் திட்டம் தீட்டி வருவதாகவும் வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் களத்தில் கடும் புயலைக் கிளப்பியுள்ளன. குறிப்பாக, ஆளும் அரசுக்கு வெளியில் ஆதரவு அளிப்பது போல் காட்டி வரும் திருமாவளவன் மற்றும் இடதுசாரி கட்சியினர், தவெக ஆட்சியை வீழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் சிறப்புச் சுருக்கத் திருத்தம் தொடா்பாக திருமாவளவன் ஆற்றிய உரை, இந்த ரகசியத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பான உளவுத்துறை அறிக்கை முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, கோட்டையில் அவசர ஆலோசனைகள் தீவிரமடைந்துள்ளன. உளவுத்துறையின் எச்சரிக்கையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த முதலமைச்சர் விஜய், தனது முதன்மை ஆலோசகர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக விவாதித்து வருகிறார். கூட்டணிக் கட்சிகள் மற்றும் ஆதரவளிக்கும் தலைவர்களின் ஒவ்வொரு நகர்வையும் உன்னிப்பாகக் கவனிக்க பிரத்யேகக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அரசியல் நெருக்கடிகளை முறியடிக்கவும், ஆட்சியின் நிலைத்தன்மையை உறுதி செய்யவும் தவெக தலைமை பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. ஆட்சிக்கலைப்பு முயற்சியை முறியடிக்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை வலுப்படுத்தவும், சட்ட ரீதியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தயாராகி வருகின்றனர். இத்தகைய சூழலால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Nanthini

Recent Posts

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

4 மணத்தியாலங்கள் ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

4 மணத்தியாலங்கள் ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

4 மணத்தியாலங்கள் ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

4 மணத்தியாலங்கள் ago

மக்கள் பிரதிநிதியா இவர்?… ஊழலற்ற ஆட்சியா?… MLA சரவணன் மீது பாயும் வழக்குகள்… வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ… கொந்தளித்த கனிமொழி MP…!!

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…

4 மணத்தியாலங்கள் ago

9 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…! கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…

4 மணத்தியாலங்கள் ago