தமிழகத்தில் பொதுமக்கள் அனீமியா (இரத்த சோகை), விட்டமின் ஏ மற்றும் பி12 குறைபாடுகளால் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில், ரேஷன் கடைகள் மூலம் செறிவூட்டப்பட்ட உணவுப் பொருட்களை விநியோகிக்க தவெக அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, இரும்புச்சத்து மற்றும் போலிக் ஆசிட் நிறைந்த செறிவூட்டப்பட்ட அரிசி, விட்டமின் ஏ மற்றும் விட்டமின் டி சத்துக்கள் நிறைந்த சமையல் எண்ணெய் ஆகியவை பொது விநியோகத் திட்டம் மூலம் மக்களுக்கு வழங்கப்படவுள்ளன. தவெக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த இந்த முக்கிய வாக்குறுதியைச் செயல்படுத்துவது குறித்து, முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் தற்போது அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆரோக்கிய மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, செறிவூட்டப்பட்ட கோதுமை மாவும் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை நீக்கும் நோக்கில் கொண்டு வரப்படும் இத்திட்டங்கள், தமிழகத்தின் பொது சுகாதாரக் கட்டமைப்பில் மிக முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சரின் இந்த அதிரடி ஆலோசனையைத் தொடர்ந்து, இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை மற்றும் விநியோகத் தேதிகள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…