தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான 10-ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 20) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக 94.31% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று மிகச்சிறந்த சாதனை படைத்துள்ளனர். இதில் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 96.47% ஆகவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 92.15% ஆகவும் பதிவாகியுள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் தங்களின் பதிவு எண்களைக் கொண்டு www.tnresults.nic.in என்கிற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் உடனடியாக அறிந்து கொள்ளலாம்.
மாநில அளவில் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில், இந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் 97.57% தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்டம் 97.54% தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்தையும், தஞ்சாவூர் மாவட்டம் 97.41% பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. மேலும், திருச்சி மாவட்டம் 97.31% தேர்ச்சியுடன் நான்காம் இடத்திலும், கன்னியாகுமரி மாவட்டம் 97.30% தேர்ச்சியுடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளன. சாதனை படைத்த மாவட்டங்களுக்கும், தேர்ச்சியடைந்த அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கல்வித்துறை மற்றும் பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
60 வயது முதியவர் மற்றும் 25 வயது இளம்பெண் இடையிலான இந்த உறவு சமூக ரீதியாகப் பார்க்கும்போது மிகவும் விசித்திரமாகவும்,…
தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 20) பொதுமக்களுக்குச் சற்று நிம்மதி அளிக்கும் வகையில் கணிசமாகக்…
திருமணமாகி நான்கு ஆண்டுகள் தம்பதியினர் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், மனைவியின் மனதில் அவரது பழைய முதல் காதல் மீண்டும்…
கான்பூரில் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) வீரரான விகாஸ் சிங், தனது தாயின் துண்டிக்கப்பட்ட கையை ஒரு தெர்மாகோல்…
தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற 10-ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 94.31% மாணவ,…
கணவர் இறந்து 25 நாட்களே ஆன நிலையில், அந்த வீடே சோகத்தில் மூழ்கியிருந்த தருணத்தில் மைத்துனர் தனது அண்ணிக்கு எதிராக…