தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (தாட்கோ) ஆதிதிராவிட மக்கள் வாங்கியுள்ள கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே தற்போது பலமாக எழுந்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது, தாட்கோ மூலம் ஆதிதிராவிட மக்கள் பெற்ற கடன்கள் அனைத்தும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்கிற மிக முக்கியமான வாக்குறுதியைத் தவெக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இதனால் கடன் சுமையில் இருக்கும் தலித் மற்றும் ஆதிதிராவிட சமூக மக்கள் இந்த அறிவிப்பின் அடுத்தகட்ட நகர்வை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு எனத் தனி அமைச்சர் இன்னும் நியமிக்கப்படாததே இந்த அறிவிப்பு தாமதமாவதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. விரைவில் நடைபெறவிருக்கும் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, இத்துறைக்கு புதிய அமைச்சர் முறைப்படி நியமிக்கப்பட்டவுடன் கடன் தள்ளுபடி செய்வதற்கான உரிய கோப்புகள் தயார் செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…