ஒரு நாளைக்கு 2 மணி நேரம் தான் பாடம்.. மற்ற நேரத்தில்.. தமிழ்நாட்டில் இப்படி ஓர் பள்ளிக் கூடமா? தெரிஞ்சா பிரமித்துப் போவீர்கள்..

By John

Updated on:

இப்புவியில் மனிதராய்ப் பிறந்த அனைவருக்கும் நாகரீகத்தைக் கற்றுக் கொடுத்து, வாழ்க்கையின் அர்த்தத்தையும், சாதனை மனிதர்கர்களையும் உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிப்பது கல்வி. ஆனால் இன்று வானுயர்ந்த காங்கிரீட் கட்டிடங்களுக்கு மாணவர்களிடம் வாடகை வசூலிக்கும் முறையாக மாறிப்போனது கல்விக் கூடங்கள். ஆனால் இவை அனைத்தையும் தாண்டி கல்வியைக் கட்டாயப்படுத்தாமல் செங்கரும்பாய் இனிக்க வைத்து மாணவர்களுக்கு ஏட்டுக் கல்வியுடன் வாழ்க்கைக் கல்வியைக் கற்றுக் கொடுத்து வருகிறது தமிழகத்தில் உள்ள ஓர் பள்ளி.

தமிழ்நாட்டில் கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டமான தருமபுரி மாவட்டத்தில் உள்ள நாகர்கூடல் பகுதியல் அமைந்துள்ளது புவிதம் பள்ளி. இந்தப் பள்ளியின் சிறப்பம்சம் என்னவென்றால் புத்தகமோ, சீருடைகளோ தேவையில்லை. வாழ்க்கைக் கல்வியை முழுக்க கற்றுக் கொடுத்து பொருளாதார தற்சார்வு வாழ்வியலை மேற்கொள்ள வைக்கிறது.

   
Puvitham
puvitham 1

பின்லாந்து நாட்டின் கல்வியை அடிப்படையாக வைத்து ஒருநாளைக்கு இரண்டு மணிநேரம் மட்டுமே ஏட்டுக்கல்வியும் மீதியுள்ள 6 மணிநேரமும் வாழ்க்கைப் பயிற்சிகளான மீதி 6 மணி நேரத்தில் தோட்டக்கலை, விவசாயம், தற்சார்பு பொருளாதாரம் ஆகியவை கற்பிக்கப்படுகிறது.

பஞ்சபூதங்களை அடிப்படையாகக் கொண்டு வகுப்புகள் பிரிக்கப்பட்டு இங்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு வகுப்பும் NCERT பாடத்திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படுவது மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் பேச பயிற்சி அளிக்கப்படுகிறது.

கோர்ட்ல டிவோர்ஸ் நடக்கும் போது எங்க அம்மா மயங்கி விழுந்துட்டாங்க.. எங்க அப்பா தான்.. மனம் திறக்கும் நளினியின் மகள்..

இதுமட்டுமல்லாமல் மாணவர்கள் தோட்டக்கலை, விவசாயம், சோப்பு உற்பத்தி, சமையல், மரவேலை, கலைப்பொருட்கள் உருவாக்குதல், போன்றவற்றை மாணவர்கள் தங்களது இளம் பருவத்திலேயே கற்றுத் தேர்கின்றனர். இப்பள்ளியை நிறுவியவர் பெயர் மீனாட்சி. உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர். புனேவில் கட்டடக்கலை படித்தவர். உலகம் கொண்டாடும் கட்டட கலை கலைஞரான லாரி பேக்கரின் நேரடி மாணவர்.

Puvi 1
puvi 1

புனேவில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வுகளால் மனம் வாடி, அமைதியை தேடி 1992-ம் ஆண்டு தமிழகம் வந்தவர். தான் விரும்பும் அமைதியான இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை, கிராமங்களில்தான் இருக்கிறது என்று உணர்ந்து தருமபுரி மாவட்டம், நாகர் கூடல் பகுதியில் கணவர் உமேசுடன் குடியேறி இந்தப்பள்ளியை 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்து நடத்தி வருகிறார். இயற்கை சார்ந்த கல்வியை தன் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்பதற்காக இந்த புவிதம் புவிதம் நர்சரி கற்றல் மையத்தை நிறுவியுள்ளார்.

இன்று பல ஆயிரங்கள் கொட்டி நுனி நாக்கில் ஆங்கிலம் பேச வைக்கும் பள்ளிகளை நோக்கிச் செல்லும் பெற்றோர்களுக்கு மத்தியில் இயற்கையை கற்றுத் தரும் புவிதம் பள்ளி ஓர் முன்மாதிரியான பள்ளியாகச் செயல்படுகிறது. இதனால் இப்பள்ளியில் வருடந்தோறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுருக்கமாகச் சொல்லப்போனால் நண்பன் பட விஜய் பாணியில் இந்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது எனலாம்.