ஆரம்பித்த ஒரே வருடத்தில் அசுர வளர்ச்சி.. இந்தியாவின் இளம் கோடீஸ்வரரான பேர்ல் கபூர்.. சாதித்தது எப்படி?

By John

Updated on:

zyber365

உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை எடுத்துக் கொண்டால் எலான் மஸ்க், ஸ்டீவ் ஜாப்ஸ், பில்கேட்ஸ் என்று இருப்பது போல, இந்தியாவில் அம்பானி குடும்பம், அதானி போன்றோர் இருக்கின்றனர். ஆனால் இவர்களுக்கெல்லாம் ஒரு நீண்ட நெடிய பயணம் உண்டு. தங்கள் நிறுவனங்களை ஆரம்பித்து பல ஆண்டுகளுக்குப் பின்னரே அவர்கள் இந்த இடத்திற்கு வந்துள்ளார்கள்.

ஆனால் தான் ஆரம்பித்த ஐடி நிறுவனத்தின் ஒரே ஆண்டில் மளமளவென முன்னேறி இன்று இந்தியாவின் இளம் வயது கோடீஸ்வரராக 27 வயதில் உருவெடுத்திருக்கிறார் பேர்ல் கபூர். இதற்கு முன் Zerodha இன் இணை நிறுவனர் நிகில் காமத், 37 வயதில் இந்தியாவின் இளைய கோடீஸ்வரர் என்ற பட்டத்தை பெற்றதே சாதனையாக இருந்தது. தற்போது பேர்ல் கபூர் அதை முறியடித்துள்ளார்.

   

கபூர் லண்டனின் குயின் மேரி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார் பின்னர் முதலீட்டு வங்கியில் M.Sc பட்டம் பெற்றார். கடந்த மே 2023 இல் தனது தொழில் முனைவோர் பயணத்தைத் தொடங்கினார். Zyber 365 ஐ எனும் இணைய முகமையை நிறுவுவதற்கு முன்பு, கபூர் AMPM ஸ்டோரில் நிதி ஆலோசகராகவும், Antier Solutions இல் வணிக ஆலோசகராகவும் பணியாற்றினார். பின்பு பிப்ரவரி 2022 இல், அவர் பில்லியன் பே டெக்னாலஜிஸ் நிறுவனத்தை நிறுவினார்.

kapur
kapur

இந்நிலையில் தனது தனியாத தொழில் ஆர்வம் காரணமாக கடந்த ஆண்டு மே மாதம், அவர் பிளாக்செயின் தொழில்நுட்பம் மற்றும் சைபர் செக்யூர் AI சுற்றுச்சூழல் அமைப்புகளில் சிறப்பு பெற்ற இந்திய நிறுவனமான Zyber 365 ஐ நிறுவினார்.

உடைந்த முதுகிலும் உலகம் சுற்றிய சாகச வீரன்.. ஆபத்துக்கே ஆபத்து காட்டிய பியர் கிரில்ஸ்-ன் கதை

Zyber 365 ஆனது லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டாலும் அதன் இந்திய செயல்பாடுகள் குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து இயங்குகிறது. நிறுவப்பட்ட ஒரு வருடத்திகுள்ளாகவே இந்நிறுவனம் இந்தியா மற்றும் ஆசியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் யூனிகார்ன் என்ற புகழைப் பெற்றது, இதன் மதிப்பு $1.2 பில்லியன் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 9,840 கோடி) என்ற அளவிற்கு வளர்ந்தது. மேலும் கபூரின் நிகர மதிப்பு $1.1 பில்லியன் (தோராயமாக ரூ. 9,129 கோடி) மற்றும் நிறுவனத்தின் 90 சதவீதத்தில் பெரும்பான்மையான பங்கைக் கொண்டுள்ளது.

இந்நிறுவனத்தின் திறனைக் கண்டறிந்து, Sram & Mram குழுவானது தொடர் A நிதியில் $100 மில்லியன் முதலீடு செய்ய Zyber 365 இன் பங்கு மதிப்பானது மேலும் உயர்ந்தது.AI மற்றும் சைபர் செக்யூரிட்டி போன்ற அதிவேக தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பில் நிலையான நடைமுறைகளுடன் இணைந்து, உலகளாவிய அளவில் தனிநபர்களை மேம்படுத்தும், உலகமயமாக்கல் 3.0 உருவாக்குவதே பேர்ல் கபூரின் எதிர்கால லட்சியமாகும்.

author avatar