உடைந்த முதுகிலும் உலகம் சுற்றிய சாகச வீரன்.. ஆபத்துக்கே ஆபத்து காட்டிய பியர் கிரில்ஸ்-ன் கதை

By John

Updated on:

Bear grylls

நீங்கள் 2000 ஆண்டுக்கு முன்னர் பிறந்தவர்களாக இருந்தால் இவரைப் பற்றி கண்டிப்பாக அறிந்திருப்பீர்கள். ஆனால் இவர் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு அரசியல்வாதியோ, நடிகரோ, விளையாட்டு வீரரோ, எழுத்தாளரோ அல்ல. ஆனால் இவற்றையெல்லாம் மிஞ்சி இன்று நாம் காணும் கற்பனைக் காட்சிகளை நிஜத்தில் நடத்திக் காட்டியவர். அவர்தான் பியர் கிரில்ஸ்.

சாகசத்தின் மறுபெயராக விளங்கும் பியர் கிரில்ஸ் 1974ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதி வடக்கு அயர்லாந்தில் உள்ள டொனகடீயில் எட்வர்ட் மைக்கேல் கிரில்ஸ் என்ற பியர் கிரில்ஸ் பிறந்தார்.

   

உலகில் இயற்கை சவால் மிகுந்த இடங்களில் சிக்கி உயிருடன் தப்புவதற்கான உயிர்வாழும் திறன்களை வெளிப்படுத்தியன் மூலம் சர்வதேச அளவில் தனக்கென முக்கிய இடத்தை பிடித்துள்ளார்.

டிஸ்கவரி சேனலில் இவரின் சாகச நிகழ்ச்சியான Man vs Wild -க்கு உலகமெங்கிலும் கோடிக்கணக்கான இரசிகர்கள் இருந்தார்கள். தனது சிறு வயதிலிருந்தே, கிரில்ஸ் சாகசங்களில் ஆழ்ந்த ஈர்ப்பைக் காட்டினார். பிரிட்டனில் வளர்ந்த அவர், சாரணர் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு காடுகள் வனங்கள் மீதான தன்னுடைய சாகசப் பயணங்களைப் பதிவு செய்தார்.

Man vs wild
man vs wild

மிரள வைக்கும் யுக்தி.. கட்டுமான பொறியியல் துறையின் உச்சம் தொட்ட பனாமா கால்வாய்.. இப்படித்தான் கட்டுனாங்களா?

1996-ல் கென்யாவில் ஃப்ரீஃபால் பாராசூட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது விபத்து ஏற்பட்டது. பாராசூட்டின் மேற்பகுதி 1,600 அடி உயரத்தில் வரும் போது கிழிந்து விட்டது. இதனால் தரையில் வேகமாக வந்து மோதி விழுந்தார். அவர் மேல் பாராசூட் விழுந்தது. முதுகெலும்பில் மூன்று உடைந்து போய் விட்டது. இவரின் நிலையைப் பார்த்த டாக்டர்கள் இவர் எழுந்து நடப்பது சந்தேகமே என்றனர். ஆனால் தன்னம்பிக்கை நிறைந்த கிரில்ஸ் 18 மாதங்களில் எழுந்து நடக்கத் தொடங்கினார். அதோடு நிற்கவில்லை.

தனது சிறுவயது லட்சியமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். முதுகெலும்பு உடைந்து இரண்டு வருடத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதித்தார். ஆபத்துக்கே ஆபத்து காட்டி மிகவும் சிக்கலான இடங்களில் உயிர் வாழ தகுதியற்ற இடங்களில் மாட்டிக் கொண்டால் எப்படி உயிர் பிழைப்பது என்று டிஸ்கவரி சேனலில் Man vs Wild நிகழ்ச்சி மூலம் வெளிக்காட்டி நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்ச பூதங்களிலும் இவர் செய்யாத சாகசங்களே இல்லை எனலாம்.‘

Bear
bear

இவர் உயிரோடு இருக்கும் பூச்சிகள், புழுக்கள், தவளைகள், நத்தைகள், மீன்கள், பல்லிகள் எல்லாவற்றையும் அப்படியே சாப்பிடக் கூடியவர். புரதம் நிறைந்த இந்த உணவை சாப்பிட்டால்தான் காட்டில் உயிர் வாழ முடியும் என்பார். அதனால் எல்லாவற்றையும் கேமரா முன் கடித்துச் சாப்பிடுவார். இவர் மக்களை ஏமாற்றுகிறார் என்றெல்லாம் சர்ச்சைகள் எழுந்தாலும் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டால் என்ன செய்ய வேண்டும் என்று பொதுமக்களுக்கு கற்பித்தது நிஜம் தான்.

மேலும் பிரதமர் மோடி, ரஜினி உள்ளிட்டோருடன்ம் இணைந்து சாகசப் பயணங்களில் ஈடுபட்டு 2K கிட்ஸ் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார் இந்த சாகச வீரன்.