Connect with us

CINEMA

விடாமுயற்சி படத்திலிருந்து நீக்கப்பட்ட விக்னேஷ் சிவன், ஆனா NETFLIX-ல படத்துல இவர் தான்.. ‘மாப்ள இவர் தான் ஆனா அவர் போட்ருக்க சட்ட அவரோடது இல்ல’ கதையா இருக்கே..

கடந்த சில ஆண்டுகளாக தியேட்டர் வசூலை காட்டிலும் டிஜிட்டல் ரைட்ஸ், சாட்டிலைட் ரைட்ஸ் மூலம் அதிக வருமானம் பார்த்து விடுகின்றனர் சினிமா தயாரிப்பாளர்கள். ஆனால், சமீபமாக இந்த விஷயத்தில் கொஞ்சம் இறுக்கப்பிடிக்க ஆரம்பித்திருக்கின்றன டிஜிட்டல் ஓடிடி தளங்கள். பல கோடிகளை இப்படி கொட்டிக் கொடுப்பதால், நிறைய இழப்புகளை சந்திக்க வேண்டி வருவதால், இதில் நிறைய ரூல்ஸ் அண்ட் ரெகுலேசன் கொண்டு வந்துள்ளன. சமீபத்தில் ரஜினி கேமியோ ரோல் செய்த லால் சலாம் படமே இன்னும் டிஜிட்டல் ரைட்ஸ் பெறாத காரணத்தால்தான், ரிலீஸ் ஆகவில்லை என்றும் கூறப்படுகிறது.

   

இதற்கிடையே தற்போது 2024 மற்றும் 2025ல் தங்களது ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்களின் பட்டியலை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் அஜீத்குமார் தற்போது நடித்து வரும் விடாமுயற்சி படமும் ஒன்றாக உள்ளது. இந்த படத்துக்கு விக்னேஷ் சிவன் இயக்குநர் என முடிவான போதே, நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம், விடாமுயற்சி படத்தை விலை பேசி வாங்கியுள்ளது.

அதன்படி, கடந்தாண்டே இந்த படம் விலை பேசி முடிக்கப்பட்டுள்ளது. அதாவது விடாமுயற்சி படத்துக்கு முந்தைய படமான துணிவு படத்தை, நெட்பிளிக்ஸ் 75 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. அப்போது அதையடுத்து விடாமுயற்சி படத்தை ரூ. 80 கோடி வாங்கி, அக்ரிமென்ட் போட்டுள்ளது. ஆனால் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் அல்ல, மகிழ் திருமேனி என்ற நிலையில், படத்துக்காக ஹைப் கூடியுள்ள்தால் ரேட்டை அதிகரிக்க வேண்டும் என அஜீத் தரப்பில் கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம், மறுப்பு தெரிவித்து விட்டது. போட்ட அக்ரிமென்ட் போட்டதுதான். அதில் மாற்றம் செய்யவே முடியாது என, தெளிவாக கூறிவிட்டது. இதனால், பல கோடிகளை இழந்து விட்டோமே, படத்தை தயாரித்துவரும் லைகா நிறுவனம் ஏமாற்றத்தில் உள்ளது.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top