ராகவா லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான திருநங்கை நடிகை ஒருவர் விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயன் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார். வில்லிவாக்கத்தை சேர்ந்த அந்த நடிகை நாஞ்சில் விஜயன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக நானும் நாஞ்சில் விஜயனும் பழகி வந்தோம். அவர் திருமணத்திற்கு முன்னதாகவே என்னுடன் பழகி பிறகு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
கடந்த ஆறு மாத காலமாக என் செல்போன் எண்ணை பிளாக் செய்து என்னுடன் பேச மறுக்கின்றார். அவர் என்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்திவிட்டு தற்போது கைவிட்டு செல்ல முயற்சிக்கின்றார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த திருநங்கை நடிகை புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக நாஞ்சில் விஜயன் தரப்பு கூறுகையில், புகார் அளித்த பெண் எனக்கு யார் என்று தெரியாது என கூறியுள்ளார்.
இந்நிலையில் நாஞ்சில் விஜயன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்து சிரித்துக் கொண்டே மேடையில் பேசுவது போன்ற ஒரு பபோட்டோவிற்கு”உன்னை பற்றி யாரு என்ன சொன்னால் என்ன… நீ இந்த காதில் வாங்கி அந்த காதில் விடு என்பது” என்ற பாடலைப் சேர்த்துள்ளார். அதற்கு ரோபோ சங்கரின் மருமகன் கார்த்திக், “வா தலைவா வா தலைவா” என்று கமெண்ட் செய்ய. அதற்கு நாஞ்சில் விஜயன் “நன்றி ஐயா” என்று பதில் அளித்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் இருவரையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தமிழக அரசியல் களத்தில் தற்பொழுது வெடித்துள்ள குதிரை பேரப் புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற…
சென்னையில் பேக்கரி தொழில் தொடங்கி சொந்தமாக லட்சக்கணக்கில் சம்பாதிக்க விரும்பும் நபர்களுக்காகத் தமிழக அரசு ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…
டெலிகிராம் செயலி உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களுடன் உரையாடவும்…
மும்பையில் கனமழை காரணமாக 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள நிலையில், பிரஹன்மும்பை மாநகராட்சி ஆணையர் அஸ்வினி பிடே நகரின் நிலைமையைக் கூர்ந்து…
மத்தியப் பிரதேச மாநிலம் சீஹோர் மாவட்ட அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் எனப்படும் கூரையிலிருந்து மழைநீர் கசிந்து ஒழுகும்…
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் சக மாணவர்களால் தொடர்ந்து பாலியல்…