Connect with us

HISTORY

இந்தியர்களின் பண்டைய ஞானத்தை தாங்கி நிற்கும் நாளந்தா பல்கலைக்கழகம்! இதுவரை யாரும் அறியாத தகவல்கள்….

இந்தியர்களின் பண்டைய ஞானத்தின் சாட்சியாக நிற்கும் பல்கலைக்கழகம்தான் நாளந்தா பக்ல்கலைக்கழகம். சுமார் ஆயிரத்தி ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு பிகாரின் பாடலிபுத்ரா நகரத்தில் (இப்போதைய பாட்னா) தொடங்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் பொ.ஆ.1193 ஆம் ஆண்டு பக்தியார் கில்ஜியின் படையெடுப்பால் அழிக்கப்பட்டது. அதன் பின் 2010 ஆம் ஆண்டு நாளந்தா பல்கலைக்கழகம் மீண்டும் உருவாக்கப்பட்டது.

பொ.ஆ. 427 ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வந்த இந்த பல்கலைக்கழகம் குப்தர்களின் காலத்தில் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மகாயன பௌத்தர்களின் ஆற்றல் இந்த பல்கலைக்கழகத்தின் அறிவுச்சுடராக அமைந்தது. நாளந்தா பல்கலைக்கழகத்தில் அந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட பத்தாயிரம் மாணவர்கள் தங்கி கல்வி பயின்றார்களாம்.

   

அவர்கள் தங்கிப் படிப்பதற்கான பல வசதிகள் செய்துதரப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 18 பாடப்பிரிவுகளில் மாணவர்கள் பயின்றார்களாம். சீனா, திபெத் போன்ற பகுதிகளில் இருந்து கூட பல மாணவர்கள் நாளந்தா பல்கலைக்கழகத்தில் தங்கிப்படித்தார்கள் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த பல்கலைக்கழகம் தடை இன்றி செயல்பட வேண்டும் என்பதற்காக 200 வீடுகளில் இருந்து அனுதினமும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதே போல் கிட்டத்தட்ட 100 கிராமங்கள் இந்த பல்கலைக்கழகத்திற்கு நிலங்களாக வழங்கப்பட்டிருக்கின்றன. சுமார் 1,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றி இருக்கிறார்கள் என்றும் பல ஆச்சரியத் தகவல்களை வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இவ்வாறு இந்தியாவின் பண்டைய ஞானத்திற்கு உதாரணமாக இருந்த பல்கலைக்கழகம் படையெடுப்புகளால் அழிக்கப்பட்டது ஒரு வரலாற்று சோகம்!

Continue Reading

More in HISTORY

To Top