விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓமந்தூர் புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை அருகே 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தியதில் அந்தப் பெண்ணை அடித்து கொலை செய்து இங்கு வீசி சென்றது தெரிய வந்தது. விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் மகேஸ்வரி என்பதும் 46 வயதுடைய அவர் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
இவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணம் ஆகி அவர் இரண்டு கணவர்களுடனும் வாழாத நிலையில் இருபது வருடங்களுக்கு முன்பு தன்னை காதலித்து கர்ப்பம் ஆக்கிய காதலனுடன் மீண்டும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு திருமணமாகி மூன்று மகள்கள் உள்ள நிலையில் இருவரும் தொடர்ந்து பழகி வந்துள்ளன. பிறகு இவர்களுடைய பழக்கம் நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியதால் மகேஸ்வரி அவரது காதலனுடன் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த மூன்றாவது நபரை தேடி வந்த நிலையில் அவர் சென்னையை சேர்ந்த 52 வயதுடைய கண்ணன் என்பதும் அவர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. வானூர் அருகே தலைமுறைகளாக இருந்த கண்ணனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பிறகு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் இருவரும் 20 வருடங்களுக்கு முன்னர் பழகி வந்ததாகவும் பிறகு பிரிந்து விட்டதாகவும் இடையில் சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் தங்களுடைய பழைய காதலை தொடங்கி அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்ததும் தெரிய வந்தது.
மேலும் மகேஸ்வரி பணத்துக்காக பலரிடம் இதுபோல உல்லாசமாக இருந்ததாகவும் இது அவருக்கு பிடிக்காததால் அந்தப் பெண்ணை அழைத்து வந்து செங்கல்பட்டு படாளம் என்ற இடத்தில் தனது லாரியை நிறுத்திவிட்டு இருவரும் மது அருந்திய பிறகு மகேஸ்வரியை அடித்து கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த கம்மல் மற்றும் தாலிச் செயின் ஆகியவற்றை எடுத்துவிட்டு சாலையோரம் வீசி சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கண்ணனை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…
இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…