#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருந்தவர் MGR. மனதில் நீங்காத இடம் பிடித்தவர் MGR. அரசியலும் சினிமாவிலும் தனக்கென தனி பாதையை உருவாக்கி அதன் வழி நடந்தவர் MGR.
குடும்ப வறுமைக்காக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த MGR பின்னர் நடிகராக உயர்ந்தார். MGRரின் படங்கள் என்றாலே சமூக நீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர்.
தன்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று விரும்பிய MGR அரசியலில் களமிறங்கி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தினார் MGR.
MGR நல்ல குணம் படைத்தவர் மட்டுமல்ல உதவும் மனப்பான்மை கொண்டவர். வாரி கொடுக்கும் வள்ளல். அது போல தனது ரசிகர்களுக்காக எது வேண்டுமானாலும் செய்யக்கூடியவர். அவர்கள் இல்லை என்றால் தான் இல்லை என்று நினைப்பவர். அதற்கு சான்றாக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
ஒருமுறை MS விஸ்வநாதன் வெளிநாட்டுக்கு சென்று டேப்ரிக்கார்டர் வாங்கிட்டு வந்தார். அது நன்றாக பாட்டு படித்தது அதை கொண்டு எம்ஜிஆர் இடம் காட்டுவதற்காக அவர் இல்லத்துக்கு சென்றார். அப்போது எம்.ஜி.ஆர் ஒரு சாதாரண டேப்பிரிகார்டை வைத்து கேட்டுக் கொண்டிருந்தார். அதில் சற்று இரைச்சல் அதிகமாக இருந்தது.
அதை கவனித்த MS விஸ்வநாதன் ஐயா இதை நான் வெளிநாட்டிலிருந்து வாங்கிட்டு வந்தேன். இந்த டேப்ரெக்கார்டர் வச்சு கேளுங்க இது கேட்பதற்கு நல்லா இனிமையா இருக்கு என்று கூறினார். உடனே எம்ஜிஆர் அதெல்லாம் முடியாது என்னோட ரசிகர்கள் மிகவும் சாதாரண மக்கள். அவர்களுக்கு நான் கேட்கக்கூடிய இந்த இரைச்சல் மிகுந்த இந்த டேப்ரிக்கார்டு கூட வாங்க வசதி இல்லாமல் இருகாங்க. இதில் நீ வெளிநாட்டில் வாங்கிட்டு வந்த டேப்ரிக்கார்டரில் கேட்க சொல்றியா அதெல்லாம் முடியாது நீ எவ்வளவு அருமையா பாடல் உருவாக்கினாலும் நான் இந்த டேப்ரிகாரில் தான் கேட்பேன். அதனால என்னோட ரசிகர்களுக்கு புரியும்படியாக எது நன்றாக இருக்கிறதோ அந்த முறையில் நீ பாடல் செய்து கொண்டு வர வேண்டும் என்று பிடிவாதமாக கூறியிருக்கிறார் எம்ஜிஆர்.
சேலம் மாவட்டம் மணியனூர் பகுதியில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் 19 வயது இளைஞர் கோகுல் என்பவர் படுகொலை செய்யப்பட்ட…
தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய், இன்று அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புகளை மேற்கொண்டார். முதற்கட்டமாக, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான…
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற நடிகர் விஜய், அரசியல் தலைவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, மதிமுக…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெறும் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று, மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதால் அக்கட்சியின் பொதுச்செயலாளர்…
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த ஜமுக்குட்டபட்டி கிராமத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரும், விவசாயியுமான சத்தியசீலன் (45) என்பவர் மர்மமான முறையில்…
கடந்த 2021-2023 காலகட்டத்தில் தமிழக மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தபோது, சுமார் 45,000 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்யப்பட்டதில்…