கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த ஜமுக்குட்டபட்டி கிராமத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரும், விவசாயியுமான சத்தியசீலன் (45) என்பவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 7-ஆம் தேதி காணாமல் போன அவர், மறுநாள் காலை தனது தென்னந்தோப்பில் தலை நசுங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த டி.ஐ.ஜி சந்தோஷ் ஹாடிமணி மற்றும் எஸ்.பி. தங்கதுறை தலைமையிலான போலீசார், அங்கு கிடைத்த ஒரு மது பாட்டில் ஸ்டிக்கரை முக்கியத் தடயமாகக் கொண்டு விசாரணையைத் தொடங்கினர்.
இந்த விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்கள் மீது போலீசாருக்குச் சந்தேகம் வலுத்தது. இது தொடர்பாக ராமகிருஷ்ணனைப் பிடித்து போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், மின் கம்பங்கள் நடுவதற்கு தனியார் நிறுவனம் வழங்கிய நில இழப்பீடு தொகையில் கிடைத்த 7 லட்சம் ரூபாய் கமிஷன் பணமே இந்தக் கொலைக்கு மூலக்காரணம் என்பது தெரியவந்தது. அந்தப் பணத்தை நண்பர்களுக்குள் பிரிப்பதில் ஏற்பட்ட மோதல், இறுதியில் சத்தியசீலனின் உயிரைப் பறிக்கும் அளவிற்குச் சென்றுள்ளது.
சம்பவத்தன்று இரவு, பண விவகாரம் தொடர்பாகப் பேச சத்தியசீலன் தனது நண்பர்களான ராமகிருஷ்ணன், காசி மற்றும் கோவிந்தசாமியைத் தோட்டத்திற்கு வரவழைத்துள்ளார். அங்கு அனைவரும் மது அருந்திக் கொண்டிருந்தபோது மீண்டும் வாக்குவாதம் முற்றியுள்ளது. ஆத்திரமடைந்த காசி அங்கிருந்த இரும்புப் பைப்பால் சத்தியசீலனைத் தாக்க, ராமகிருஷ்ணன் அவரைத் தூண்டிவிட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சத்தியசீலன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் கொலையாளிகள் இருவரும் தடையங்களை ஏரிக்கரையில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
மிகவும் கொடூரமான விஷயம் என்னவென்றால், கொலையைச் செய்த ராமகிருஷ்ணனும் காசியும் அடுத்த நாள் காலை ஒன்றும் தெரியாதது போல் பொதுமக்கள் கூட்டத்தில் நின்று வேடிக்கை பார்த்துள்ளனர். அதுமட்டுமின்றி, பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சத்தியசீலனின் உடலை அடக்கம் செய்யும் பணிகளையும் முன்னின்று கவனித்துள்ளனர். நண்பனைக் கொன்றுவிட்டு எவ்விதச் சலனமுமின்றி நாடகமாடிய இவர்களின் செயல் போலீசாரையே அதிர வைத்துள்ளது. தற்போது இருவரையும் கைது செய்துள்ள நாகரசம்பட்டி போலீசார், அவர்களைச் சிறையில் அடைத்துள்ளனர்.
ஓய்வுபெற்ற மூத்த குடிமக்கள் தங்களின் சேமிப்பிற்குப் பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தைப் பெற வங்கி நிலையான வைப்புத்தொகை (FD) மற்றும்…
உத்தரப் பிரதேச மாநிலம் சந்தௌலியில் 26 மணி நேர இடைவெளியில் மூன்று பேரைச் சுட்டுக் கொன்ற பஞ்சாப்பைச் சேர்ந்த 'சைக்கோ'…
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியின் போது, டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்…
கோடை காலத்தில் காய்கறிகள் விரைவில் அழுகிப்போவதைத் தடுக்க, பிரிட்ஜ் இல்லாமலேயே அவற்றின் ஆயுட்காலத்தை நீட்டிக்க பல எளிய வழிமுறைகள் உள்ளன.…
சருமத்தில் ஏற்படும் ஸ்டிரெச் மார்க்ஸ் (Stretch Marks) என்பது வெறும் அழகு சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, அது சருமத்தின் உட்புற…
நடந்து முடிந்த கிரிக்கெட் போட்டியின் போது, மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் கூப்பர் கோனோலி அடித்த பிரம்மாண்டமான 100 மீட்டர்…