கடந்த 2021-2023 காலகட்டத்தில் தமிழக மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தபோது, சுமார் 45,000 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் அரசுக்கு ₹397 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகப் புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ (CBI) விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதனை எதிர்த்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் விக்ரம்நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, உயர் நீதிமன்றத்தின் முடிவில் தலையிட தாங்கள் விரும்பவில்லை எனக் கூறி அந்த மனுவைத் தள்ளுபடி செய்தனர். இதன் மூலம், டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு புகாரில் சிபிஐ விசாரணை தொடர்வதற்கான சட்டப்பூர்வத் தடைகள் நீங்கி, விசாரணை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), தனியார் அறக்கட்டளைகளை (Private Trusts) ஒழுங்குபடுத்தும் விதமாக புதிய நிலையான செயல்பாட்டு…
ஓய்வுபெற்ற மூத்த குடிமக்கள் தங்களின் சேமிப்பிற்குப் பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தைப் பெற வங்கி நிலையான வைப்புத்தொகை (FD) மற்றும்…
உத்தரப் பிரதேச மாநிலம் சந்தௌலியில் 26 மணி நேர இடைவெளியில் மூன்று பேரைச் சுட்டுக் கொன்ற பஞ்சாப்பைச் சேர்ந்த 'சைக்கோ'…
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியின் போது, டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்…
கோடை காலத்தில் காய்கறிகள் விரைவில் அழுகிப்போவதைத் தடுக்க, பிரிட்ஜ் இல்லாமலேயே அவற்றின் ஆயுட்காலத்தை நீட்டிக்க பல எளிய வழிமுறைகள் உள்ளன.…
சருமத்தில் ஏற்படும் ஸ்டிரெச் மார்க்ஸ் (Stretch Marks) என்பது வெறும் அழகு சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, அது சருமத்தின் உட்புற…