சன் டிவியில் ஒளிபரப்பாக கூடிய சீரியல்கள் பெரும்பாலும் குறைந்தபட்சம் ஆயிரம் எபிசோட்களை நெருங்கிய பிறகு தான் முடிவுக்கு வரும். அதற்குப் போட்டியாக தற்போது விஜய் டிவி சீரியல்களும் ஆயிரம் எபிசோடுகளை கடந்து தான் முடிவுக்கு வருகின்றன. அதுவும் குறிப்பாக ஒரு சில சீரியல்கள் எந்த அளவிற்கு இழுத்தடிக்க முடியுமோ அந்த அளவுக்கு இழுத்தடிக்கப்பட்டு மூன்று நான்கு வருடங்கள் கழித்து தான் முடிவுக்கு வரும். ஆனால் தற்போது ஒவ்வொரு சேனல்களும் போட்டி போட்டுக் கொண்டு வருவதால் விஜய் டிவியில் டிஆர்பி ரேட்டிங்கில் அடிப்படும் சீரியல்கள் விரைவில் முடிவுக்கு வரவுள்ளன. இந்த சீரியல்களை எல்லாம் தூக்கிவிட்டு சன் டிவியை போலவே விஜய் டிவியும் புது சீரியல்களை களம் இறக்க திட்டமிட்டுள்ளது.
அதன்படி தற்போது கதையே இல்லாமல் மட்டமாக ஓடிக்கொண்டு வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு முடிவு கட்ட விஜய் டிவி திட்டமிட்டுள்ளது. இந்த சீரியல் இந்த மாதம் இறுதிக்குள் முடியப் போகிறது. அதனைப் போலவே விஜய் டிவி சீரியல் ஹீரோ திரவியம் நடித்துக் கொண்டிருக்கும் வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற சீரியலும் டிஆர்பி ரேட்டிங்கில் மிக மோசமான புள்ளிகளை பெற்றுள்ளதால் இந்த சீரியலை முடிவு கட்டப் போகிறார்கள். பிக் பாஸ் இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வர உள்ள நிலையில் பிக் பாஸ் முடியும்போது இந்த சீரியலையும் முடித்துவிட்டு அதற்கு பதிலாக புத்தம் புது சீரியல்கள் வரப்போகிறது.
அதன்படி திரவியம் புதுசாக சிந்து பைரவி என்ற சீரியலில் கமிட் ஆகியுள்ள நிலையில் இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக சிந்து மற்றும் பைரவி என்ற கேரக்டரில் இரண்டு ஹீரோயினிகள் நடிக்க உள்ளனர். அதில் மௌன ராகம் சீரியலில் நடித்த ரவீனா மற்றும் தெலுங்கு சீரியல் ஹீரோயின் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மோதலும் காதலும் சீரியலில் விக்ரம் கதாபாத்திரத்தில் நடித்த சமீர் புதிதாக பூங்காற்று திரும்புமா என்ற சீரியலில் நடிக்க கமிட்டாகி உள்ள நிலையில் பிக் பாஸ் முடிந்தவுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.
இதில் இவருக்கு ஜோடியாக முத்தழகு சீரியலில் நடித்த முத்தழகு தான் கமிட் ஆகியுள்ளார். அடுத்ததாக சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியல் மூலம் பிரபலமான மதுமிதா என்ற ஜனனி விஜய் டிவியில் அய்யனார் துணை என்ற புதிய நாடகத்தில் நடித்து வரும் நிலையில் அவருக்கு ஜோடியாக விஜய் டிவி சீரியல் ஹீரோ முன்னா கமிட் ஆகியுள்ளார். அதன்படி விஜய் டிவியில் இந்த புது மூன்று சீரியல்களும் விரைவில் ஒளிபரப்பாக உள்ளன.
அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பினரிடையே தற்போது கடும் போட்டி…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேற்று இரவு சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்ற…
பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…
மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…