அப்பா மற்றும் அண்ணன் மூலமாக சினிமாவிற்குள் ஈசியாக நுழைந்து இருந்தாலும் தன் திறமையால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகர் ஜெயம் ரவி. ஆனால் அதை தக்க வைக்க முடியாமல் சமீப காலமாகவே போராடிக் கொண்டிருக்கிறார். காரணம் இவர் சமீப காலமாகவே நடித்த திரைப்படங்கள் அனைத்தும் சொல்லிக் கொள்ளும்படி இல்லாமல் தோல்வியை சந்தித்து வருகின்றன. இவருக்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் மட்டும் தான் வெற்றியை கொடுத்திருந்தது. அதுவும் இவர் நான்கு நடிகர்களில் ஒருவராக நடித்திருந்ததால் மட்டும்தான் அந்த படம் பெயர் வாங்கி கொடுத்தது. இதனால் மீண்டும் எப்படியாவது தன்னை நிரூபித்து காட்ட வேண்டும் என்று ஜெயம் ரவி தவித்துக் கொண்டிருக்கிறார். சர்ச்சை மற்றும் கிசுகிசுக்களில் சிக்காத நடிகர்களில் ஒருவராக இருந்த இவர் கடந்த சில மாதங்களாக தனது மனைவியை விவாகரத்து செய்த பேச்சு தான் பேசும் பொருளாக மாறி உள்ளது.
இருந்தாலும் இவர் மீது எந்தத் தவறும் இல்லை என்று ரசிகர்கள் இவருக்கு சாதகமாக குரல் கொடுத்து வருகிறார்கள். இவருடைய விவாகரத்திற்கு முக்கிய காரணம் ஜெயம் ரவியின் மாமியார் தான் என கூறப்படுகிறது. மாமியாரின் தயாரிப்பில் சில திரைப்படங்களில் நடித்ததால் ஏராளமான பிரச்சனைகளை ஜெயம் ரவி சந்தித்துள்ளார்.
இதனால்தான் இவருடைய மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளார். தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்வியை சந்தித்ததால் சினிமாவில் தொடர் தோல்விகளை சந்தித்து விடக்கூடாது என்பதற்காக எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் ஜெயம் ரவி இருக்கின்றார்.
ஆனால் தீபாவளி என்று வெளியான பிரதர் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து ஜெனி மற்றும் காதலிக்க நேரமில்லை ஆகிய திரைப்படங்களில் ஜெயம் ரவி நடித்து வருகின்றார். அதே சமயம் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள புதிய திரைப்படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்க உள்ளார்.
இந்தப் படங்களையடுத்து ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தை டாடா படத்தின் இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்குகிறார். ஜெயம் ரவியின் 34வது படமாக உருவாகும் இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா சார்பில் சுந்தர் ஆறுமுகம் தயாரிக்கிறார். தவ்தி ஜிவால் நாயகியாக நடிக்கிறார்.
இந்தப் படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கின. படப்பிடிப்பு திங்கட்கிழமை தொடங்கும் என கூறப்படுகிறது. இப்படியான நிலையில் ஜெயம் ரவி 34வது திரைப்படத்தில் பிரபல இயக்குனர் பி. வாசுவின் மகன் சக்தி ஜெயம் ரவிக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று நடைபெற்ற படத்தின் பூஜையில் கூட அவர் கலந்து கொண்டார். தொடர் தோல்விகளை சந்தித்த ஜெயம் ரவி இந்த படத்தில் வெற்றி காண்பாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…
மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…