#image_title
பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான Vivo தனது புதிய Vivo X200 ஸ்மார்ட்போன் சீரிஸை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது பல முக்கியமான சிறப்பம்சங்களுடன் வந்திருக்கிறது. இதன் விவரக் குறிப்புகள் என்ன விலை என்ன என்பதை பற்றி இனி காண்போம்.
Vivo X200 ஆனது 6.67 இன்ச் Amoled டிஸ்ப்ளே உடன் வருகிறது. 120Hz ரெப்பிரேஷ் ரேட் Mediatek டைமண்ட் சிட்டி 9400 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த Vivo ஸ்மார்ட் போன் ஆனது X200 மற்றும் X200 ப்ரோ ஆகிய இரண்டு வகைகளில் வருகிறது. இரண்டு போன்களும் வாட்டர் ரெசிஸ்டன்டுக்காக IP68 பிளஸ் IP69 தர மதிப்பீட்டைக் கொண்டிருக்கிறது.
மேலும் இந்த Vivo X200 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது ஆண்ட்ராய்டு 15 அடிப்படையில் ஆன Funtouch OS வெர்ஷன் மூலம் இயங்குகிறது. OS அப்டேட்களும் 5 வருட செக்யூரிட்டி அப்டேட்டுகளுடன் வருகிறது. இந்த Vivo X200 மற்றும் Vivo X200 ப்ரோ ஆனது 100x டிஜிட்டல் டெலி போட்டோ இமேஜ் கொண்ட 50 எம்பி ட்ரிபிள் சென்சார் மற்றும் 200 MP பெரிஸ்கோப் டெலி போட்டோ லென்ஸ்சும் இரண்டு 50 எம்பி சென்சார்களையும் கொண்டிருக்கிறது. 5800 mah பேட்டரி உடன் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.
இந்த Vivo X200 12 ஜிபி 256 gb ஸ்டோரேஜ் வேரியன்ட் ஆனது ரூபாய் 65999 விலையில் வருகிறது. vivo x200 pro 16gb 512 gb ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூபாய் 94999 விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்களின் விற்பனை டிசம்பர் 19 முதல் தொடங்குகிறது. HDFC வங்கி மற்றும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் கிரெடிட் கார்டுகளின் மூலம் இந்த ஸ்மார்ட்போன்களை வாங்கும்போது ரூபாய் 7200 வரை கேஷ்பேக் உங்களுக்கு கிடைக்கும்.
பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…
மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…