“அப்போ அப்படி.. இப்போ இப்படி.. அப்படியே தலைகீழா மாறிட்டாரே”.. இணையத்தை உலுக்கும் அமைச்சர் கீர்த்தனாவின் அந்த ‘சிரிப்பு’.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!!

Spread the love

தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. குறிப்பாக, தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பெண் பாதுகாப்பை வலியுறுத்தி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது. இந்நிலையில், தவெக ஆட்சி அமைந்த சில நாட்களிலேயே அடுத்தடுத்து கொலை, கற்பழிப்பு சம்பவங்கள் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தின. அதிலும் குறிப்பாக, கோவையில் 10 வயது சிறுமி ஒருவர் பக்கத்து வீட்டில் வசிப்பவராலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து சிவகாசி தொகுதியில் இருந்து வெற்றி பெற்று தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பெண் அமைச்சர் எஸ். கீர்த்தனாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “தலைவர் என்ன முடிவெடுத்தாலும் சரியாக இருக்கும்” என்று சம்பந்தமில்லாமல் சிரித்துக்கொண்டே பதிலளித்துவிட்டுச் சென்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, தேர்தல் பிரச்சாரத்தின் போது “பெண்களை அடிமைப்படுத்தும் ஆட்சி தேவையா?” என அவர் ஆவேசமாகப் பேசிய பழைய வீடியோவையும் இதனுடன் இணைத்து நெட்டிசன்கள் அவரைச் சரமாரியாக விமர்சித்து ட்ரோல் செய்யத் தொடங்கினர். ஒரு பெண் அமைச்சராக இருந்துகொண்டு இத்தகைய கொடூர சம்பவத்திற்கு உரிய பதில் அளிக்காமல் சிரித்துக்கொண்டே சென்றது ஏன் என்று பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இவ்விவகாரம் பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, அமைச்சர் கீர்த்தனா தனது செயலுக்குப் புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். தொழில்துறை கூட்டத்தை முடித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்துத் திரும்பிய போது, இயல்பாக வெளிப்பட்ட தனது புன்னகை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, அரசியல் நோக்கில் திரிக்கப்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், கோவையில் சிறுமிக்கு நடந்த கொடுஞ்செயல் மிகுந்த வேதனை அளிப்பதாகவும், முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார். உண்மைகளைத் திரித்து, ஒரு பெண்ணின் உடல்மொழியை அரசியல் ஆயுதமாக மாற்றித் தனிப்பட்ட முறையில் தாக்குவது ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல என்றும் அவர் தனது விளக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Muthu Mani

Recent Posts

பார்க்கவே பதறுது…! தண்ணீருக்கு நடுவே மின்சார வேலை… நொடியில் தூக்கி வீசப்பட்டு இறந்த வாலிபர்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

மின்சாரக் கம்பியை இணைத்து வேலை பார்த்துக்கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக நீரில் மின்சாரம் பாய்ந்ததில் அனுராக் யாதவ் எனும் வாலிபர் பரிதாபமாக…

11 minutes ago

திக் திக்….! வெடித்து சிதறிய ட்ரான்ஸ்பார்மர்… தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நபர்…. தெறித்து ஓடிய மக்கள்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு பாகலூர் கிராஸ் அருகே உள்ள அமேசான் நிறுவன அலுவலகத்தின் 3-வது நுழைவாயில் நடைபாதையில் அமைக்கப்பட்டிருந்த மின்மாற்றி…

25 minutes ago

பெட்ரோல் பங்க்கில் அராஜகம்…! கார் ஓட்டுனரை துடைப்பத்தால் அடித்து உதைத்த ஊழியர்கள்…. வீடியோவை பார்த்து கொந்தளிக்கும் நெட்டிசன்கள்… பகீர் சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலம் பீவண்டி அருகே, மும்பை-நாசிக் நெடுஞ்சாலையில் உள்ள சரவாலி கிராமத்திற்குட்பட்ட ஜியோ பெட்ரோல் பங்ககில், காரோட்டி ஒருவருக்கும் அங்கிருந்த…

31 minutes ago

பள்ளியா? பலிபீடமா?… கதறித் துடித்த மாணவர்கள்… தொட்டிக்குள் ஏற்பட்ட மர்மம்… மூச்சுத்திணறி பறிபோன 4 உயிர்கள்… பள்ளியில் நடந்த நெஞ்சை பிளக்கும் துயரம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள பிருந்தாவன் அருகே செயல்பட்டு வரும் மகரிஷி குருகுல் சமஸ்கிருத வித்யாலயாவில் இந்தத் துயரச் சம்பவம்…

32 minutes ago

“கை, கால்கள் இல்லாமல் சிதைக்கப்பட்டு…” ஆடையின்றி நாய்கள் கடித்து குதறி கிடந்த பெண்ணின் உடல்…. கூட்டு வன்கொடுமை செய்யப்பட்டாரா…? பகீர் சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் நாபோல் காவல் எல்லைக்குட்பட்ட தட்டி அண்ணாரம் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகே, ஆடைகளின்றி…

38 minutes ago