தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் நாபோல் காவல் எல்லைக்குட்பட்ட தட்டி அண்ணாரம் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகே, ஆடைகளின்றி நாய்களால் கடித்துக் குதறப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. காலையில் நடைப்பயிற்சி சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த நாபோல் காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றினர்.
சடலத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட ஆதார் அட்டையைக் கொண்டு, இறந்து கிடந்தவர் உஸ்மானியா பல்கலைக்கழக மாணிகேஸ்வர் நகரைச் சேர்ந்த மங்கம்மா என்பது உறுதி செய்யப்பட்டது. இவர் கடந்த செப்டம்பர் 29 அன்று கேட்டரிங் வேலைக்குச் சென்ற நிலையில் காணாமல் போனதாக ஓயு காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் பதிவாகியிருந்தது. உடலின் கை, கால்கள் இல்லாமல் சிதைந்து கிடந்த நிலையிலும், மதுபாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டதாலும், அவர் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஜாண்பூர் மாவட்டம் முங்கராபாட்ஷாபூர் பகுதியில், போலிஸார் சிலர் ஒரு வீட்டிற்குள் அத்துமீறிப் புகுந்து அங்குள்ள பெண்களைக்…
ஆந்திரப் பிரதேச மாநிலம் பல்நாடு மாவட்டம் பிடுகுராள்ள காவல் நிலையத்திற்கு எதிரிலேயே நடுரோட்டில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான கொடூரக் கொலைச்…
ஜெய்பூர் ஜகத்புரா பகுதியில் உள்ள வி.ஐ.டி சாலையில் இரண்டு குழுக்களுக்கு இடையே திடீரென கடுமையான மோதல் ஏற்பட்டது. வாய் தகராறாகத்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஜி.ஹள்ளி பகுதிக்குட்பட்ட குஷால்நகரில், கடந்த செப்டம்பர் 25 அன்று மாலை 4:30 மணியளவில் பயங்கர தாக்குதல்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில், குடும்பத்தினர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வேறு ஒருவருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததால், 19…
திருவம்பாடி பேருந்து நிலையத்திற்குள் வியாழக்கிழமை நுழைந்த கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து மோதியதில், பிளஸ் ஒன் மாணவர் ஒருவர் பலத்த காயமடைந்தார். விபத்தின்…