உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள பிருந்தாவன் அருகே செயல்பட்டு வரும் மகரிஷி குருகுல் சமஸ்கிருத வித்யாலயாவில் இந்தத் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அப்பள்ளியில் உள்ள 12 அடி ஆழமான தண்ணீர் தொட்டியில் வீசிய துர்நாற்றத்தைப் போக்குவதற்காக அதனைச் சுத்தம் செய்ய ஐந்து மாணவர்கள் உள்ளே இறங்கியுள்ளனர். அப்போது, தொட்டிக்குள் எதிர்பாராத விதமாகத் தேங்கியிருந்த விஷவாயுவைத் சுவாசித்ததால் மூச்சுத்திணறி நான்கு மாணவர்கள் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் சிக்கிய மற்றொரு மாணவர் உடனடியாக உயிருடன் மீட்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். பல நாட்களாகத் தொட்டிக்குள் அடைபட்டிருந்த அபாயகரமான வாயுவே மாணவர்களின் மயக்கத்திற்கும் மரணத்திற்கும் காரணம் எனத் தொடக்கக்கட்ட விசாரணையில் அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்த நெஞ்சை உருக்கும் நிகழ்வால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ள நிலையில், மாவட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேவையான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு வித்யாரண்யபுரா முதன்மைச் சாலையில் இயங்கி வரும் 'மை சலூன் அண்ட் ஸ்பா' மையத்திற்குள் கடந்த அக்டோபர்…
கர்நாடக மாநிலம் மடிக்கேரி - பாகமண்டலா முதன்மைச் சாலையில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று எதிரே வந்த கார்…
குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தில், கணவனைப் பிரிந்து வேறொரு நபருடன் வாழச் சென்ற திருமணமான பெண் ஒருவர் மீது, 'புனிதப்படுத்தும்…
பெட்ரோல் பங்க்கிற்கு காரில் வந்த பெண் ஒருவர், டீசல் போடுவதற்காகக் காரை நிறுத்திவிட்டு, போனில் பேசுவது போல நடித்துக் காரை…
மின்சாரக் கம்பியை இணைத்து வேலை பார்த்துக்கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக நீரில் மின்சாரம் பாய்ந்ததில் அனுராக் யாதவ் எனும் வாலிபர் பரிதாபமாக…
அசாம் மாநிலம் கவுஹாத்தி பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 22 வயதான நிமிஷா தாகூரியா என்ற மாணவியின் மர்ம மரண வழக்கில்…