Connect with us
Anbe va

CINEMA

ஒவ்வொரு நிகழ்விலும் உன்னத மனிதர் என்பதை நிரூபித்த எம்.ஜி.ஆர்.. நெகிழ வைக்கும் சம்பவம்

மூன்று வேளை உணவிற்காக நாடகத் துறையில் நுழைந்து பின் படிப்படியாக சினிமாவில் நடித்து நாட்டையே ஆண்டவர்தான் எம்.ஜி.ஆர். சிறுவயதில் தான் பட்ட கஷ்டங்கள் யாரும் படக் கூடாது என்பதற்காக தன்னை நாடி வந்தவர்களுக்கும், அரசியலில் நுழைந்து முதலமைச்சராகவும் எண்ணற்ற பல திட்டங்களைத் தீட்டி இன்றுவரை மக்களின் இதய தெய்வமாகத் திகழ்கிறார்.

அதேபோல் தான் வறுமையில் இருந்தாலும் தன்னிடம் பணம் இருக்கும் நேரத்தில் தனக்கு நெருக்கமாக பலருக்கும் உதவும் எண்ணம் கொண்டவர் எம்.ஜி.ஆர், சினிமாவில் நடிக்க தொடங்கும்போது பல தடைகள் வந்தாலும் 10 ஆண்டுகள் கழித்து அவர் நாயகனாக உருவெடுத்த போது பல தடைகள் அவரை துரத்தி வந்துள்ளது. இவற்றை எல்லாம் கடந்து எம்.ஜி.ஆர் திரைத்துறையில் தனது ஆளுமையை செலுத்தி வந்துள்ளார்.

   

தன்னால் முடிந்த வரைக்கும் பிறருக்கு உதவ வேண்டும் என்ற குறிக்கோள் கொண்ட எம்.ஜி.ஆர் கடைசி வரைக்கும் அதேபோல் வாழ்ந்து காட்டியுள்ளார். அதேபோல் யாராக இருந்தாலும் உதவும் மனப்பான்மையுடன் பேசும் எம்.ஜி.ஆர் படப்பிடிப்பு தளத்தில் நடந்துகொண்ட விதம் குறித்து தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 1966-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் அன்பே வா.

anbe va

#image_title

திருலோகச்சந்தர் இயக்கிய இந்த படத்தில், எம்.ஜி.ஆர், சரோஜா தேவி, நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதனிடையே அன்பே வா படத்தின் படப்பிடிப்பின்போது அப்படத்தின் தயாரிப்பாளராக இருந்த ஏ.வி.எம் சரவணன் தயாரிப்பு பணிகளை கவனித்து வந்துள்ளார். அப்போது சிம்லாவில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது.

சிம்லாவில் கடும் குளிர் என்பதால் ஏ.வி.எம் சரவணன் சரவணனுக்கு தொண்டை வறண்டு போய் உடல் நிலை சரியில்லாமல் ஆகியுள்ளது. மேலும் கடும் குளிர் என்பதால், படப்பிடிப்பு தளத்திற்கு வந்தாலும் காரிலேயே முடங்கி கிடந்துள்ளார். அப்போது அவரின் நிலையை பார்த்த எம்.ஜி.ஆர் ஒரு டம்ளரில் பால் எடுத்துக்கொண்டு போய் காரில் இருந்த ஏ.வி.எம் சரவணனிடம் கொடுத்துள்ளார்.

avm saravana

#image_title

கலைஞர் வசனமா..? தெறித்து ஓடிய ரஜினி.. விட்டுக் கொடுத்த கருணாநிதி

இதை சற்றும் எதிர்பாராத ஏ.வி.எம் சரவணன், நீங்கள் ஏன் எடுத்துக்கொண்டு வருகிறீர்கள். வேறு யாரிடமாவது கொடுத்து அனுப்பியிருக்கலாமே என்று சொல்ல, எம்.ஜி.ஆரே வேறு யாரிடமாவது கொடுத்தால் நீங்கள் ஏதாவது சொல்லி குடிக்காமல் இருக்க வாய்ப்பு உள்ளது. அதே நான் வந்து கொடுத்தால் கண்டிப்பாக குடிப்பீர்கள். இந்த குளிருக்கு சூடான பால் உங்கள் தொண்டைக்கு இதமாக இருக்கும் குடியுங்கள் என்று எம்.ஜி.ஆர் கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆரின் இந்த வார்த்தையை கேட்ட ஏ.வி.எம் சரவணன் நெகிழ்ந்து போயுள்ளார். இதன் மூலம் மற்றவர்களுக்கு உதவி மட்டுமல்ல தன்னை சுற்றியுள்ளவர்களின் உடல் நலத்திலும் எம்.ஜி.ஆர் மிகுந்த அக்கறை உடையவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Continue Reading

More in CINEMA

To Top