தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகூடெம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 36 வயது பழங்குடியின பெண் சர்பஞ்ச் வெங்கடரமணா என்பவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவர்கள் அளவுக்கு அதிகமான மருந்துகளைச் செலுத்தியதே அவரது இறப்பிற்குக் காரணம் என்றும், நிலைமை மோசமடைந்த பின்னரே அவரை வேறொரு மருத்துவமனைக்கு மாற்றியதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். மேலும், இறப்பிற்கான சரியான காரணத்தைக் கூறாமல் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாகப் பதிலளித்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அங்குப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது ஆத்திரமடைந்த உறவினர் ஒருவர், மருத்துவமனையின் வரவேற்புப் பகுதிக்குத் தீ வைக்க முயன்றதால் அங்குப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே விரைந்து வந்த காவல் துறையினர், தீயை அணைத்துச் சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாகப் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், மருத்துவ அலட்சியம் மற்றும் தீவைப்பு முயற்சி குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில், 32 வயதான ரீட்டா என்ற பெண் சாலை விபத்தில் உயிரிழந்தது போல் சித்தரிக்கப்பட்டு…
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து…