பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு வங்கத்தில் இருந்து அதிவேகமாக வந்த பேருந்து மோதியதில், தக்கியா கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான மனிஷ் குமார் என்ற கூலித்தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். குடும்பத்தின் முக்கிய வாழ்வாதாரமாகவும், மூன்று உடன்பிறப்புகளில் மூத்தவராகவும் இருந்த மனிஷ், அன்று காலை தான் கூலி வேலைக்காக வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றிருந்தார். அவரது மரணச் செய்தியைக் கேட்டு அவரது தாய் கதறி அழுது நிலை குலைந்துபோனார்.
இந்த விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் வன்முறை வெடித்தது. ஆத்திரமடைந்த கும்பல் 2 காவல் வாகனங்கள், விபத்தை ஏற்படுத்திய பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்கள் உட்பட சுமார் 10 வாகனங்களுக்குத் தீ வைத்தது. மேலும், போக்குவரத்து காவல் சாவடியைக் கொளுத்தியதோடு, செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களைத் தாக்கி, NH-30 சாலையில் சுமார் 10 கி.மீ தூரத்திற்குப் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தினர். சம்பவ இடத்தில் இருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் என்.என்.சிங் கூறுகையில், வன்முறையாளர்கள் மிகவும் உக்கிரமாக மாறியதால், காவலர்கள் தங்களின் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து தப்பியோட வேண்டிய நிலை ஏற்பட்டது என்று தெரிவித்தார்.
சூழ்நிலையின் தீவிரத்தைக் கருதி, பாட்னா நகர ஏஎஸ்பி ராஜ் கிஷோர் சிங் தலைமையில் 9 காவல் நிலையங்களைச் சேர்ந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கலைக்கவும், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரவும் காவல்துறையினர் தடிடிப் பிரயோகம் மேற்கொண்டனர். அதன்பின்னர், மனிஷின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கிரேன் இயந்திரங்கள் மூலம் எரிக்கப்பட்ட வாகனங்கள் அகற்றப்பட்டு, NH-30 நெடுஞ்சாலையில் போக்குவரத்து சீர்செய்யப்பட்டது. தற்போது அசம்பாவிதங்களைத் தடுக்க அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில், 32 வயதான ரீட்டா என்ற பெண் சாலை விபத்தில் உயிரிழந்தது போல் சித்தரிக்கப்பட்டு…