அடச்சீ… இன்சூரன்ஸ் ரூ.44 லட்சத்திற்கு ஆசைப்பட்டு… மனைவியை காரை ஏற்றி கொன்ற கணவன்… உ . பி -யில் அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில், 32 வயதான ரீட்டா என்ற பெண் சாலை விபத்தில் உயிரிழந்தது போல் சித்தரிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ரீட்டாவைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட அவரது கணவர் அமர் சிங், தனது மூன்று கூட்டாளிகளுடன் சேர்ந்து இச்சதியைத் தீட்டியுள்ளார். தொடக்கத்தில் இது சாதாரண சாலை விபத்து என சந்தேகிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினரின் தீவிர விசாரணையில் இது திட்டமிடப்பட்ட கொலை என்பது வெளிச்சத்திற்கு வந்தது.

ரீட்டாவின் பெயரில் இருந்த ரூ.44 லட்சம் ஆயுள் காப்பீட்டுத் தொகையைக் கைப்பற்றுவதும், தனக்கிருந்த கடன்களை அடைப்பதுமே அமர் சிங்கின் முக்கிய நோக்கமாகும். காப்பீட்டுத் தொகையில் ரூ.15 லட்சத்தை அமர் சிங் எடுத்துக்கொண்டு, மீதமுள்ள தொகையைக் கூட்டாளிகளுக்குப் பிரித்துக் கொடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. திட்டப்படி, ரீட்டாவைச் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்த அமர் சிங், அங்கு காத்திருந்த கூட்டாளிகளின் காரை வைத்து அவர் மீது மோதச் செய்துள்ளார். பின்னர் பள்ளத்தில் விழுந்த அவரை வெளியே எடுத்து சாலையில் கிடத்தி, மீண்டும் அவர் மீது கார் ஏற்றிப் படுகொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர்.

மனைவியைக் கொன்ற பிறகு, எதுவும் தெரியாதது போல் அமர் சிங் காவல் நிலையத்திற்குச் சென்று ரீட்டாவைக் காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். இருப்பினும், சடலத்திற்கு அருகில் கிடைத்த வங்கிச் சீட்டு, கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் தொழிற்நுட்ப ஆய்வுகள் மூலமாக 48 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் உண்மையைக் கண்டறிந்தனர். இச்சம்பவம் தொடர்பாகக் கணவர் அமர் சிங் மற்றும் அவரது கூட்டாளிகளான அமித் குப்தா, புஷ்பேந்திர சோனி, அபய் சிங் ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Swetha

Recent Posts

அம்மாடியோ… நிலநடுக்கத்தின் அறிகுறியா?… திடீரென கொந்தளிக்கும் கிணற்று நீர்… குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்ம சம்பவம்…!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…

10 minutes ago

அதிர்ச்சி… தாய் கதறல்… கூலித் தொழிலாளி பேருந்து மோதி பலி… பாட்னாவில் வன்முறை வெடிப்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்…!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…

18 minutes ago

“ஆளே இல்லன்னா என்னடா… நாங்க இறங்குனா ஆட்டமே… வேற மாதிரி இருக்கும்”… மைதானத்தை கலக்கிய மாஸ் கேட்ச்… இணையத்தில் வைரல் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…

36 minutes ago

அட கடவுளே… முகத்தில் மேக்கப்… பெண் வேடத்தில் 3 குழந்தைகளின்… தந்தை தூக்கில் தொங்கிய கொடூரம்… பகீர் பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…

43 minutes ago

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

50 minutes ago

பகீர்… “சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆண் சடலம்”… போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்தது என்ன?…

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து…

1 மணத்தியாலம் ago