தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து டெல்லி சென்ற இந்த ரயிலின் பொதுப் பெட்டியில், ஆக்ரா கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியின் போது துர்நாற்றம் வீசிய சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்றை ஊழியர்கள் கண்டறிந்தனர். போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு சூட்கேஸ் திறக்கப்பட்டபோது, அதற்குள் துண்டுகளாக வெட்டப்பட்ட ஆண் சடலம், சென்னையில் உள்ள பிரபல ஜவுளிக்கடைக் கவரில் சுற்றி வைக்கப்பட்ருந்தது தெரியவந்தது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தச் சம்பவம் நடந்துள்ளது கண்டறியப்பட்டது. ஒரு ஆணும் பெண்ணும் இந்த சிவப்பு நிற சூட்கேஸுடன் சென்னை சென்ட்ரல் வந்து, அதை ரயிலின் பொதுப் பெட்டியில் வைத்துவிட்டு வெளியேறியுள்ளனர். பின்னர் அவர்கள் பூங்கா ரயில் நிலையத்திற்குச் சென்று வேறொரு ரயிலில் தப்பிச் சென்ற காட்சி பதிவாகியுள்ளது. இந்தத் தடயங்களைக் கொண்டு கொலையாளிகளை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட நபர் யார் என்பதைக் கண்டறிய, சடலத்தைச் சுற்றியிருந்த பிரபல ஜவுளிக்கடைக் கவர் மற்றும் அதனுடன் கைப்பற்றப்பட்ட சில ரசீதுகள், பில்கள் உள்ளிட்ட ஆதாரங்களை வைத்து ரயில்வே போலீசார் முதற்கட்ட விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இந்தத் தடயங்களின் மூலம் உயிரிழந்தவரின் அடையாளத்தை முதலில் உறுதிசெய்து, அதன்பின் கொலையாளிகளின் பின்னணி மற்றும் கொலைக்கான காரணத்தைக் கண்டறிய சென்னை மற்றும் ஆக்ரா ரயில்வே போலீசார் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில், 32 வயதான ரீட்டா என்ற பெண் சாலை விபத்தில் உயிரிழந்தது போல் சித்தரிக்கப்பட்டு…