“டீச்சர்… 5 வருஷத்துக்கு முன்னாடி… எனக்கு குட் டச், பேட் டச்… வகுப்பில் சட்டென எழுந்த சிறுமி… உறைந்துபோன ஆசிரியர்… திருவண்ணாமலையில் பரபரப்பு…!”

Spread the love

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள அரசுப் பள்ளியில், 8-ஆம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியை ஒருவர் ‘நல்ல தொடுதல் மற்றும் கெட்ட தொடுதல்’ குறித்த விழிப்புணர்வு வகுப்பை நடத்தியுள்ளார். அப்போது, ஏதேனும் தவறான சம்பவங்கள் நடந்திருந்தால் பயப்படாமல் தன்னிடம் கூறுமாறு ஆசிரியை நம்பிக்கை அளித்துள்ளார். வகுப்பிற்குப் பிறகு, 13 வயது மாணவி ஒருவர் கண்ணீருடன் ஆசிரியையை அணுகி, தனக்கு நேர்ந்த கொடுமையைக் கூறியுள்ளார்.

கடந்த 2021-ஆம் ஆண்டு, அம்மாணவி 3-ஆம் வகுப்பு (8 வயது) படித்துக்கொண்டிருந்தபோது, பள்ளி அருகே விளையாடிக்கொண்டிருந்த அவரை ஒரு நபர் பலவந்தமாகத் தன் வீட்டிற்கு இழுத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும், இதை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதால், பயத்தின் காரணமாக மாணவி 5 ஆண்டுகளாக இச்சம்பவத்தை வெளியில் சொல்லாமல் தவித்து வந்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை, மாணவியின் தாயாரை வரவழைத்து விவரத்தைக் கூறி, ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் செய்தார். விசாரணையில், இக்கொடூரச் செயலில் ஈடுபட்டது கொசப்பாளையத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஐயப்பன் (42) என்பது தெரியவந்தது. அவரைப் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்த காவல்துறையினர், வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். ஆசிரியையின் விழிப்புணர்வால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளி தண்டிக்கப்பட்ட இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Swetha

Recent Posts

ஐயோ பாவம்… சுரங்கப்பாதையில் நொறுங்கிய SUV கார்… கதறித் துடித்த பயணிகள்… காங்கிரஸ் முக்கிய புள்ளி பரிதாப பலி… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!

வெள்ளிக்கிழமை அதிகாலை புனே-மும்பை விரைவுச்சாலையின் 'மிஸ்ஸிங் லிங்க்' சுரங்கப்பாதைக்குள் நடந்த கொடூரமான சாலை விபத்தில், பிம்ப்ரி சின்ச்வாட் வாக்காட் பகுதியைச்…

10 minutes ago

அட கொடுமையே… வாடிக்கையாளர் போல வந்து துப்பாக்கிச் சூடு… நகைக் கடையில் நடந்த பகீர் சம்பவம்… பதறவைக்கும் வீடியோ…!

பெங்களூரு அருகே தாபஸ்பேட்டையில் உள்ள 'பிரேம் சிவா ஜுவல்லரி' நகைக் கடைக்குள் புகுந்த 5 முதல் 6 பேர் கொண்ட…

18 minutes ago

ஐயோ… என் 300 ரூபாய் போச்சு… தம்பிக்குத் துணி எடுக்க முடியாதே?… கதறி அழுத பாட்டி… பேருந்துக்குள் நடந்த அந்த சம்பவம்… நெட்டிசென்களை கலங்க வைக்கும் வைரல் வீடியோ…!

ஒரு பாசமுள்ள சகோதரியின் அழுகை அங்கிருந்த மனிதர்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பியது. சகோதரனின் முகத்தைக் கடைசியாகப் பார்த்து, அவனுக்கு ஒரு…

27 minutes ago

காதலனா? கணவனா? துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் பார்சல்… சினிமாவை மிஞ்சும் கொடூரம்… காட்டிக்கொடுத்த சென்ட்ரல் சிசிடிவி… போலீஸ் வலைவீச்சு…!!

சென்னையிலிருந்து டெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் ஆக்ரா கண்டோன்மெண்ட் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது, பொதுப்பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த சிவப்பு நிற…

35 minutes ago

“அவனைக் கொன்னுடு.. இல்லனா நான் செத்துருவேன்”….. மனைவியின் வாட்ஸ்அப் மெசேஜைப் பார்த்து அலறி அடித்து ஓடிய கணவன்…. இறுதியில் காத்திருந்த டுவிஸ்ட்…!

மகாபூபாபாத் மாவட்டம் தோர்ணக்கல் மண்டலம் சிலுகோடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வர ராவ் என்பவருக்கும், சூர்யாபேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பவானி என்பவருக்கும்…

47 minutes ago