“நீ நடிகன்டா”… வாடிக்கையாளர் போல வந்த திருடன்… ஓனர் கண்முன்னே ட்ரேவுடன் நகைகளை தூக்கிச் சென்ற கொடுமை… பட்டப்பகலில் நடந்த பயங்கரம்…!

Spread the love

மராட்டிய மாநிலம் நார்போலி பகுதியில் உள்ள நகை கடைக்கு கூட்டம் அதிகமாக இல்லாத நேரத்தில் வாடிக்கையாளர் போல ஒரு நபர் சென்றுள்ளார். அங்கு கடையில் இருந்த நகைகளை பார்வையிடுவது போல நீண்ட நேரமாக உலா வந்த நபர் கடைக்காரரிடம் புதிய டிசைன் வகைகளை பார்க்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கடைக்காரர் அந்த நபருக்கு புதிய டிசைன் நகைகள் அடங்கிய ஒரு ட்ரேவை எடுத்துக்காட்டினார். அதிலிருந்த நகைகளின் விலைகளை கடைக்காரர் கூறிக் கொண்டிருந்தார். அந்த நபரும் நகைகளை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று நகை டிரேவை அப்படியே தூக்கிக் கொண்டு கடையிலிருந்து அந்த நபர் ஓட்டம் பிடித்தார்.

கடைக்காரர் சுதாகரிப்பதற்குள் மின்னல் வேகத்தில் அந்த நபர் கடையிலிருந்து தப்பி சென்று விட்டார். பிறகு அவரை துரத்திப் பிடிக்க கடைக்காரர் மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்த நிலையில் கடையின் உரிமையாளர் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து நகைகளை திருடி சென்ற நபரை வலைவீசி தேடி வருகிறார்கள். பட்டப் பகலில் நகை கடைக்குள் நுழைந்து கடைக்காரர் கண் முன்னே திருடன் நகைகளை திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

FLASH NEWS: தமிழகத்தை உலுக்கிய விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு… இரட்டை தூக்கு தண்டனை… தர்ம முனீஸ்வரனுக்கு நீதிமன்றம் விதித்த இறுதி தீர்ப்பு…!

விளாத்திக்குளத்தில் பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம்…

6 minutes ago

சற்றுமுன் அதிர்ச்சி… பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய ஆயில் ஃபேக்டரி…. சென்னையை உலுக்கிய பரபரப்பு காட்சி…!

சென்னை மணலி அருகே உள்ள ஒரு தனியார் எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பெரும்…

10 minutes ago

கோவையில் அடுத்த அதிர்ச்சி… அன்னூரில் நடுரோட்டில் நடந்த சைக்கோத்தனம்… திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடிக்கு நேர்ந்த பயங்கரம்…!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள் கட்டுக்குள் வரவில்லை என்ற குற்றச்சாட்டு…

15 minutes ago

#BREAKING: “தலைகீழாக மாறிய தமிழக அரசியல்”… ஆற்காடு சுகுமாரை தொடர்ந்து முகாம் மாறினார் பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ. மோகன்…!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மூத்த தலைவர்களான எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் தலைமையில் 25 எம்.எல்.ஏக்கள்…

24 minutes ago

“என் புருஷன் விஷம் குடிச்சிட்டார்!” – கணவனின் இறந்த உடலுக்கு அருகே கள்ளகாதலனோடு விருந்து சாப்பிட்டு கொண்டாடிய மனைவி…. இறுதியில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவி மற்றும் அவரது தங்கை தங்களது காதலர்களுடன்…

37 minutes ago