Categories: சினிமா

ஜனநாயகன் படமே வேண்டாம் என்ற திடீர் முடிவுக்கு வந்த தியேட்டர் உரிமையாளர்கள் – ரிலீஸ் செய்யும் முன்பே கடும் எதிர்ப்பை சந்தித்த விஜய் – ஷாக் ஆன ரசிகர்கள்

Spread the love

வருகிற ஜனவரி 9ம் தேதி விஜய் நடித்த ஜனநாயகன் படம் வெளியாக உள்ளது. அடுத்த நாளே 10ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படத்தை வெளியிடவும் படக்குழு முடிவு செய்திருக்கிறது. ரெட்ஜெயிண்ட் முவீஸ்தான் பராசக்தி படத்தை வெளியிடுகிறது என்பதும் கவனிக்கத்தக்கது. அதனால் விஜய் படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைப்பதில் பலத்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே எங்களுக்கு விஜய் படமே வேண்டாம். பராசக்தி படத்தை வெளியிடுங்கள். அந்த படத்தை திரையிடுகிறோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சிலர், உதயநிதியிடம் பேசிய ஒரு தகவல் இப்போது வெளியாகி உள்ளது. இதற்கு காரணம், ஜனநாயகன் படத்தை திரையிடும் தியேட்டர்களில் 80 – 20 என்ற ஷேர் பேசப்பட்டுள்ளது. அதாவது தியேட்டர் டிக்கெட் வசூலில் விநியோகஸ்தர்களுக்கு 80 சதவீத பங்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கு 20 சதவீதம் பங்கும் என்று பேசப்பட்டுள்ளது.

ஏற்கனவே தியேட்டர் உரிமையாளர்கள் பலத்த நஷ்டத்தில் தியேட்டர்களை நடத்தி வருகின்றனர். பெரும்பாலான படங்கள் ஓடுவதே இல்லை. விஜய் போன்ற பெரிய நடிகர்கள் வந்தால்தான் கொஞ்சம் வருமானம் பார்க்கின்றனர். முதல் 60 – 40 என்ற ஷேர் இருந்த நிலையில் பிறகு அது 70- 30 என்று மாறியது. இப்போது 75 – 25 என்றாவது வரும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்பார்த்த நிலையில் 80-20 என்று வினியோகஸ்தர்கள் ஷேர் கேட்டிருக்கின்றனர்.

அதனால் விஜய் படத்துக்கு பதிலாக நாங்கள் பராசக்தி படத்தை திரையிடுகிறோம். 75 – 25 ஷேர் கொடுங்கள் என்று பல தியேட்டர் உரிமையாளர்கள் உதயநிதியிடம் கோரிக்கை வைத்த நிலையில்தான் பராசக்தி படம் ஜனவரி 14க்கு பதிலாக 10ம் தேதியே ரிலீஸ் செய்ய முடிவானது. இதுவும் விஜய் படத்துடன் சிவகார்த்திகேயன் படம் மோத முக்கிய காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Elango

Recent Posts

120 மீட்டர் சுற்றளவே சாம்பலாகும்… ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த மரண மாஸ் வார்னிங்… உலகையே உலுக்கிய ‘மார்க் 84’ குண்டின் ரகசியம்.. ட்ரூத் சோஷியலில் வெளியான அந்த போட்டோ…!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான அணு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து முழுமையாகப் பின்வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியான சில மணி நேரங்களிலேயே,…

1 minute ago

நடுவானில் இரண்டாகப் பிளந்த பாராசூட்… மரணத்தின் விளிம்பிலிருந்து தப்பிய பெண்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்… பதைபதைக்க வைக்கும் வீடியோ….!

வேலைப்பளு மற்றும் அன்றாட வாழ்க்கையின் பரபரப்பிலிருந்து விடுபட்டு, மனதை லேசாக்கிக் கொள்ளவே நாம் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்கிறோம். அங்கு நமக்குத்…

6 minutes ago

தேதி குறிச்சாச்சி?.. 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி விருது விழா.. எப்போது தெரியுமா?.. முதலமைச்சர் விஜய் போட்ட ‘மெகா’ பிளான்… வெளியான ரகசியத் தகவல்..!!

தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்குத் தமிழக…

6 minutes ago

தமிழக அரசியலில் திடீர் பூகம்பம்.. கூண்டோடு காலி… விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்… செம ஷாக்கில் திருமா…!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையிலும், மாநில அரசியல் களம் இன்னும் அமைதியடைந்தபாடில்லை. அடுத்தடுத்து…

11 minutes ago

“தமிழகத்தையே உலுக்கிய கொடூரம்”… விளாத்திகுளம் மாணவி வழக்கு…. போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், கடந்த மார்ச் மாதம் பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட…

17 minutes ago