ஆந்திராவில் மனைவியின் ஸ்வட்டர் லேசை கொண்டு கழுத்தை நெரித்து கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் உள்ள சாந்தமகுளூர் மண்டலம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ்வர்லுவும், பல்நாடு மாவட்டம் மச்ச வரத்தை சேர்ந்த மகாலட்சுமி என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சில காலமாக வெங்கடேஷ் மனைவி மீது சந்தேகத்தால் அடிக்கடி சண்டை இட்டு வந்துள்ளார்.
இதனால் கருத்து வேறுபாடு காரணமாக மகாலட்சுமி தனது தாய் வீட்டிற்கு சென்று பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை மச்ச வரம் சென்ற வெங்கடேஷ் மனைவிக்கு தங்க நகை வாங்கி தருவதாக கூறி பைக்கில் கிராமத்தின் புறநகர் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர் அணிந்திருந்த ஸ்வெட்டரில் இருந்த லேஸை கொண்டு கழுத்தை நெறித்து கொடூரமாக கொலை செய்தார்.
பிறகு மனைவியின் உடலை பைக்கில் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று போலீசார் முன்பு சரணடைந்தார். போலீசார் உடனடியாக மகாலட்சுமியை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் வெங்கடேஷ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதிதாகப் பதவியேற்றுள்ள தவெக அரசுக்கு நிர்வாகத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளக் கால…
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு எதிராக, அடுத்தடுத்து குதிரை பேரம்…
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தமிழக அரசியல் சூழல் குறித்துப் பல்வேறு…
அதிமுகவில் மேலும் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய…
தமிழக அரசியல் களம் தற்போது இடைத்தேர்தல் மோடிற்குள் நுழைந்துள்ள நிலையில், கோட்டை வட்டாரங்களில் அமைச்சரவை மாற்றம் குறித்த விவாதங்கள் அனல்…
தமிழக பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவிற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக, முற்றிலும் நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் 215…