ஓபிஎஸ்-க்கு காலையிலேயே ஷாக்…. திமுகவில் 250 பேருடன் இணையும் முக்கிய புள்ளி…. செம குஷியில் ஸ்டாலின்…!

Spread the love

அதிமுக உட்கட்சி மோதல் மற்றும் அரசியல் மாற்றங்களுக்கு இடையே, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தைத் தொடர்ந்து ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகியான குன்னம் ராமச்சந்திரனும் திமுகவில் இணைய உள்ள செய்தி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் போன்ற முன்னணி நிர்வாகிகள் திமுகவில் இணைந்த நிலையில், தற்போது வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியில் இணைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட முன்னாள் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான குன்னம் ராமச்சந்திரனும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் விரைவில் திமுகவில் இணையப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வைத்திலிங்கம் முன்னிலையில், தானும் திமுகவில் இணையவுள்ளதாக அதிமுக Ex MLA குன்னம் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். ஜன.26-ல் தஞ்சையில் நடைபெறும் விழாவில் தன்னுடன் 250 பேர் திமுகவில் சேரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குன்னம் ராமச்சந்திரன் கடந்த 2016-ம் ஆண்டு அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2021 தேர்தலிலும் போட்டியிட்ட அவர், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த இவர், தற்போது நிலவும் அரசியல் சூழல் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் எடுக்கப்படும் முடிவுகளில் உள்ள காலதாமதம் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அடுத்தடுத்து முக்கிய தலைவர்கள் திமுகவை நோக்கிப் படையெடுப்பது அதிமுக வட்டாரத்திலும், குறிப்பாக ஓபிஎஸ் அணியிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“இது உன் அப்பன் வீட்டுப் பூங்காவா…?” நாங்க தான் குரங்கோட இடத்தை ஆக்கிரமிச்சோம்…! – இணையத்தை உலுக்கும் காரசார வாக்குவாதம்…!!

அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…

5 மணத்தியாலங்கள் ago

“நாங்கள் விற்காவிட்டால்… எவனும் விற்க முடியாது…!” – அமெரிக்காவை அலறவிடும் ஈரான்…! ஹார்முஸ் ஜலசந்தியை முடக்க திட்டம்…? தீவிரமடையும் உலகப்போர் அபாயம்…!!

தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…

5 மணத்தியாலங்கள் ago

“யாரும் எதிர்பார்க்காத திருப்பம்…! இனி நோ கேன்சர்… பெண்களுக்காக கர்நாடகா அரசு போட்ட மாஸ்டர் பிளான்…!”

பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…

5 மணத்தியாலங்கள் ago

“தமிழக பெண்களுக்கு ஜாக்பாட்… இலவச பேருந்து பயணம்…? மகளிர் உரிமைத் தொகை ரூ 2,500 உயர்வு எப்போது…?” – 2 வாரத்தில் வரப்போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…

5 மணத்தியாலங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு…! கைரேகை பதிவு செய்யாவிட்டால் பெயர் நீக்கமா…? விளக்கம் கொடுத்த அதிகாரிகள்…!!

தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…

5 மணத்தியாலங்கள் ago

“இது என்னடா புதுசா…”அரங்கம் அதிர வைக்க வந்த ரசிகர்கள்… ‘செக்’ வைத்த திரையரங்கம்… ரசிகர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… அறந்தாங்கியில் உச்சகட்ட பரபரப்பு…!

சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…

5 மணத்தியாலங்கள் ago